vadivelu dubbing atrocities in chandramukhi

”சந்திரமுகியோட பெஸ்ட் ஃப்ரண்ட் நான்தான்டா”: வடிவேலுவின் டப்பிங் அட்ராசிட்டிஸ்!

சினிமா

சந்திரமுகி படத்திற்காக நடிகர் வடிவேலு டப்பிங் பேசும் வீடியோவை படக்குழு இன்று (ஆகஸ்ட் 16) பகிர்ந்துள்ளது.

பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான படம் சந்திரமுகி. இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, பிரபு, வினித் உள்ளிட்டோர் நடிப்பில் 6 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம் 200 நாட்களுக்கும் மேல் ஓடி 40 கோடி ரூபாய் வசூலை அள்ளிக் குவித்தது.

இதனையடுத்து 17 வருடங்கள் கழித்து சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் பி.வாசு. ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

லைகா புரடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு மைசூரு, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்றது. சில தினங்களுக்கு முன்பு சந்திரமுகி படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்ததாக படக்குழு அறிவித்திருந்தது. தொடர்ந்து போஸ்ட் புரடக்‌ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சந்திரமுகி 2 ஆம் பாகம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், அதற்கான புரோமோஷன் வேலைகளை தொடங்கியுள்ளது படக்குழு. கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஸ்வகதாஞ்சலி என்ற பாடலை வெளியிட்டது. தொடர்ந்து இன்று நடிகர் வடிவேலு டப்பிங் செய்யும் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் ஸ்டுடியோவில் டப்பிங் செய்யும் போது, “யார பாத்துட பீதிக்கு பிறந்தவன்னே பீத்தற பயலே… சந்திரமுகி பார்ட் 1, பார்ட் 2, பார்ட் 3……. 10 வரைக்கும் எடுத்தாலும் சந்திரமுகியோட பெஸ்ட் ஃப்ரண்ட் நான்தான்டா” என்று பேசியவுடன், ”எவரதே…..” என்று சந்திரமுகியின் குரல் ஆக்ரோஷமாக ஒலிக்கும் போது ஸ்டுயோவில் உள்ள விளக்குகள் அணைந்து அணைந்து எரிகின்றன.

vadivelu dubbing atrocities in chandramukhi

மீண்டும் வடிவேலு அவருக்கே உரிய உடல் மொழியுடன், “ஒன்னுல்ல மேடம்… டப்பிங் பேசிக்கிட்டிருக்கேன்” என்று கூறுகிறார்.

இந்த வீடியோவை பகிர்ந்த படக்குழு “வடிவேலு மற்றும் சந்திரமுகி அக்காவின் டப்பிங் அட்ராசிட்டிஸ்” என்று பதிவிட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

மோனிஷா

சுங்கச்சாவடி கட்டணம் : வாகன ஓட்டிகளிடம் சுரண்டும் மத்திய அரசு!

விபத்திற்கு பிறகு முதன்முறையாக… ரிஷப் பந்த் வீடியோ வைரல்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
3
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *