‘கச்சா பாதாம்’ பாடலுக்கு டான்ஸ் ஆடிய வடிவேலு

Published On:

| By Jegadeesh

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் நாளை (டிசம்பர் 9 ) வெளியாகவுள்ள நிலையில், அப்படத்தில் நாயகனாக நடித்துள்ள வடிவேலுவின் புதிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் படம் நாய் சேகர். இப்படத்தில் நடிகர் வடிவேலு நாய் சேகர் ரோலில் நடித்துள்ளார்.

இவரின் மகளாக விஜய் டிவி பிரபலம் மற்றும் பாடகியான சிவாங்கி கிருஷ்ணகுமார் நடித்துள்ளார். மேலும் ரெட்டின் கிங்ஸ்லி, ஷிவானி நாராயணன், ஆனந்தராஜ், முனீஷ்காந்த், ஆர்.ஜே. விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு, யூடியூபர் பிரஷாந்த் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், முன்னதாக இந்தப் படத்தின் முதல் பாடலாக ’எங்க அப்பத்தா’ பாடல் வெளியாகி இணையத்தில் ஹிட் அடித்தது. இந்தப் பாடல் வரிகளை துரை, அசல் கோலர் இணைந்து எழுதியுள்ளனர்.

இந்நிலையில், வடிவேலுவின் புதிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சில மாதங்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலான பாடல் கச்சா பாதாம். இந்த பாடலுக்கு பலரும் நடனமாடி தங்களது வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனர்.

இந்த நிலையில், நடிகர் வடிவேலுவும் இப்பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த வீடியோவை லைகா நிறுவனம் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வடிவேலுவின் நடன வீடியோவை வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோ தற்போது வைரலாகிவரும் நிலையில், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பும் எகிறி வருகிறது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

குஜராத் தேர்தல்: உணர்ச்சிவசப்பட்ட மோடி

வேண்டும்  செல்லதுரை வேண்டும்” : ஸ்டாலின் முன்பு தென்காசியில்  திடீர் கோஷம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel