பாஸ்கர் சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வடக்கன்’ படத்தின் பெயர் ‘ரயில்’ என்று மாற்றப்பட்டுள்ளது.
‘வெண்ணிலா கபடி குழு’, ‘நான் மகான் அல்ல’, ‘அழகர்சாமியின் குதிரை’ உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியவர் பாஸ்கர் சக்தி. ‘வடக்கன்’ படத்தின் மூலம் இவர் இயக்குனராக என்ட்ரி கொடுத்தார்.
இப்படத்தில் குங்குமராஜ், வைரமாலா, ரமேஷ்வைத்யா, பர்வேஸ் மெஹ்ரு, சமிரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிஸ்கவரி சினிமாஸ் சார்பில் வேடியப்பன் இப்படத்தை தயாரித்துள்ளார்.
தமிழகத்தில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களை மையப்படுத்தி ‘வடக்கன்’ படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், ‘வடக்கன்’ திரைப்படம் மே 24-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு முதலில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ஆனால், படத்தின் தலைப்புக்கு சென்சார் போர்டு எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டது.
சென்சார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது ‘வடக்கன்’ படத்தின் தலைப்பு ரயில் என்று மாற்றப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் வேடியப்பன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் டிஸ்கவரி சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான விரைவில் வெளியீடு காண இருக்கும் ‘வடக்கன்’ திரைப்படத்தின் பெயர், தணிக்கை அதிகாரிகள் தடை செய்ததால், தற்போது ‘ரயில்’ என்று மாற்றப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
படத்தின் வெளியீட்டுத் தேதி அடுத்த அறிவிப்பில் வெளியாகும். உங்கள் அனைவரின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் வேண்டுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
புதிய எண்ணம்… துவண்டுவிடாத உத்வேகம்: குமரி தியானம் குறித்து மோடி
150 மாவட்ட ஆட்சியர்களிடம் அமித்ஷா பேசினாரா? தேர்தல் ஆணையர் பதில்!