பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி டிசம்பர் 15, 2023 அன்று வெளியான படம் ஃபைட்கிளப்.
இந்தப்படத்தில், உறியடி விஜய்குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மோனிஷா மோகன் மேனன் நடித்திருக்கிறார்.
இவர்களுடன் கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ், அவினாஷ் ரகுதேவன் , சரவணன் வேல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.
சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகி இருக்கும் இந்தத்திரைப்படத்திற்கு விக்கி மற்றும் அம்ரீன் – அபுபக்கர் ஆகியோர் இணைந்து சண்டை காட்சிகளை அமைத்திருக்கிறார்கள்.
இப்படம் தயாரானதும் இதைப்பார்த்த இயக்குநர் லோகேஷ்கனகராஜ், அவர் தொடங்கியிருக்கும் புதிய தயாரிப்பு நிறுவனமான ஜி ஸ்குவாட் நிறுவனம் சார்பாக வெளியிட்டார்.
வெளியீட்டுக்கு முன்பே இப்படத்தின் இணைய ஒளிபரப்பு மற்றும் தொலைக்காட்சி உரிமை 5 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்படட்டது.
டிசம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியானது. மாறுபட்ட எதிர்மறையான விமர்சனங்கள் இருந்த போதிலும் திரையரங்குகளில் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் வெளியான முதல் மூன்று நாட்களில் 5.75 கோடி ரூபாய் மொத்தவசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
IPL2024: சென்னையுடன் மீண்டுமொரு உரசல்… ரூ. 20.50 கோடி கொடுத்து கேப்டனையும் வாங்கியது ஹைதராபாத்!
“ED அதிகாரி லேப்டாப்பில் சிக்கிய பட்டியல்” : அங்கித் திவாரிக்கு ஜாமீன் கிடைக்குமா?