நடிகர் தனுஷ் நடித்த ‘வாத்தி’ திரைப்படத்தின் முதல் பாடல் இன்று (நவம்பர் 10) தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ளது.
ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடிகர் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படத்தின் ’வா வாத்தி’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம், மற்றும் ‘நானே வருவேன்’ போன்ற திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தது மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் இடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘வாத்தி’. இந்தப் படத்தின் முதல் பாடல் வரும் நவம்பர் 10 ஆம் தேதி, அதாவது இன்று வெளியாக உள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இரண்டு நாட்களுக்கு முன்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

அதனை தொடர்ந்து தமிழில் ‘வா வாத்தி’ என்றும் தெலுங்கில் ‘மாஸ்டரு’ என்றும் தொடங்கும் இந்த பாடல் இன்று (நவம்பர் 10 ) மாலை வெளியானது.
இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் ஸ்வேதா மோகன் பாடியுள்ள இந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பட்டாசு ஆலை விபத்து: முதலமைச்சர் நிதியுதவி!
யசோதா வெளியாவதற்கு முன்பே சந்தோஷப்பட்ட சமந்தா!