ரூ. 10 கோடி: சமாதானமான வாத்தி தனுஷ்

Published On:

| By Kavi

வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா மேனன், சாய்குமார், தணிகல பரணி, சமுத்திரக்கனி, தொட்ட பள்ளி மது, நரா சீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, சாரா, ஆடுகளம் நரேன், இளவரசு,’ நான் கடவுள் ‘ ராஜேந்திரன், ஹரிஷ் பேரடி ஆகியோர் நடித்துள்ள படம் வாத்தி.

இந்தப் படம் டிசம்பர் 2 ஆம் தேதி அன்று தெலுங்கு மற்றும் தமிழில் உலகம் முழுவதும் வெளியாகும் என்று படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பு நிறுவனம் அறிவித்த போது படத்தின் நாயகனான தனுஷ் அதைக் கண்டுகொள்ளவே இல்லை.

அவருக்கு பதினாறு கோடி சம்பளபாக்கி வைத்துவிட்டு படத்தை வெளியிடும் அறிவிப்பை வெளியிட்டதால் அவர் அப்படத்தைக் கண்டுகொள்ளவில்லை என்று தனுஷ் வட்டாரத்தில் கூறப்பட்டது.

இப்போது நவம்பர் 10 அன்று வாத்தி படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் வெளியாகவிருக்கிறது எனும் தகவலை தனுஷ் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்ததோடு,

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உடன் இணைந்து பாடல்வரிகளைப் பாடும் காணொலியையும் பகிர்ந்திருந்தார்.

இதன்மூலம் தயாரிப்பு நிறுவனத்தோடு சமரசம் ஏற்பட்டுவிட்டது என்கின்றனர் தயாரிப்பாளர்கள் வட்டாரத்தில் 

எப்படி நடந்தது இந்த சமரசம் என்று விசாரித்தபோது, “சினிமாவில் காசோலையை காட்டிலும் குறைவாக இருந்தாலும் உடனடியாக கிடைக்கும் கரன்சிக்கு மதிப்பு அதிகம்.

அதனால் தயாரிப்பு நிறுவனம் நடிகர் தனுஷுக்கு சம்பள பாக்கியில் ஒரே நேரத்தில் 10 கோடி ரூபாயை ரொக்கமாக கொடுத்துவிட்டதாம், மீதியை பட வெளியீட்டு நேரத்தில் கொடுத்துவிடுகிறோம் என்றும் தயாரிப்புத் தரப்பு உறுதியளித்துள்ளனர்.

அதனால் சமாதானமடைந்த தனுஷ், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படத்தை விளம்பரப்படுத்தியது போன்று வாத்தி படத்திற்கு செய்வதற்கான பணிகளில் ஆர்வமாக இறங்கியிருக்கிறார்” என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில்.

இராமானுஜம்

கவிதாலயா – ஹாட் ஸ்டார் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ்

39 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment