இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா மற்றும் சமுத்திரகனி நடிப்பில், சித்தாரா என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான திரைப்படம் வாத்தி. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.
’வாத்தி’ திரைப்படம் வெளியாகி 15 நாட்களை கடந்துள்ள நிலையில், தற்போது உலகளவில் 100 கோடி வசூலை குவித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இதற்கு நன்றி தெரிவித்து நடிகர் தனுஷ் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
அவரது திருச்சிற்றம்பலம் திரைப்படம் சமீபத்தில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வாத்தி படமும் வெற்றி பெற்றிருப்பது தனுஷ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வாத்தி திரைப்படம் தெலுங்கில் சார் என்ற பெயரில் வெளியிடப்பட்டது. அங்கும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். அதிக பொருட்செலவில் உருவாகி வரும் இந்த படத்தை சத்ய ஜோதி நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படமும் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்ற எதிர்பார்ப்பில் தனுஷ் ரசிகர்கள் உள்ளனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
ஏப்ரல் 1 முதல் ஹால்மார்க் இல்லாத நகைகள் விற்க தடை!