விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தின் முதல் பாடல் ப்ரோமோ இன்று மாலை வெளியாகும் என ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தில் சரத்குமார், ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
வாரிசு திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் நடந்து வரும் நிலையில், படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தீபாவளிக்கு வாரிசு திரைப்படத்தின் பாடல் வெளியாகும் என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், வாரிசு திரைப்படத்தின் போஸ்டர் மட்டும் வெளியாகி இருந்தது.
இதனால் வாரிசு படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என்று விஜய் ரசிகர்கள் காத்திருந்த நிலையில், இன்று மாலை 6.30 மணிக்கு வாரிசு திரைப்படத்தின் முதல் பாடல் ப்ரோமோ வெளியாகும் என்று ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். வாரிசு ஹேஷ்டாக்கை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
செல்வம்
பிரபல ஜவுளிக்கடைகளில் 2 ஆவது நாளாக ஐடி ரெய்டு!
“காந்தாரா” பற்றி நிர்மலா சொன்னது என்ன?