’சின்னத்திரை நயன்தாரா’ வாணி போஜன் முடிவு: ரசிகர்கள் குஷி!

சினிமா

அறிவழகன் இயக்கத்தில் நடிகர் அருண்விஜய், வாணிபோஜன், ஐஸ்வர்யா மேனன் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள ’தமிழ் ராக்கர்ஸ்’ வெப் சீரிஸ் வரும் 19ம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது. இதற்காக படக்குழுவினர் தீவிர புரோமோஷனில் இறங்கியுள்ளனர். இதற்கிடையே சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் வாணிபோஜன் அளித்துள்ள பதிலால் அவரது ரசிகர்கள் உற்சாகமாகி உள்ளனர்.

சின்னத்திரையில் நடித்த காலத்தில் ‘சின்னத்திரை நயன் தாரா’ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் நடிகை வாணி போஜன். விமான பணிப்பெண்ணாக இருந்து சின்னத்திரையில் நுழைந்து தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருகிறார் வாணி போஜன். சின்னத் திரையில் இவரது நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள், ஜீ தமிழில் லட்சுமி வந்தாச்சு போன்ற சீரியல்கள் அவருக்கு பெரும் ரசிகர்களை பெற்று தந்தது.

டஜன் படங்களை கைவசம் வைத்திருக்கும் வாணி!

தொடர்ந்து வெள்ளித் திரையிலும் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அசோக் செல்வனுடன் ஓ மை கடவுளே, ஜெய்க்கு ஜோடியாக வெப் சீரிஸ் என நடித்துள்ளார். மேலும் தற்போது வாணி போஜன் நடித்துள்ள தமிழ் ராக்கர்ஸ் வெளியாக உள்ள நிலையில், பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, பாயுமொளி நீ எனக்கு, தாழ் திறவாய், ஊர்க்குருவி, காசிமேடு போன்ற பல திரைப்படங்களை தன் கைவவசம் வைத்துள்ளார்.

கவர்ச்சியில் ஒரு எல்லை உண்டு!

இதுவரை அடக்கி வாசித்து வந்த வாணி போஜன், கடந்த சில மாதங்களாக அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மாடர்ன் மற்றும் சேலை உடையில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் வெப்சீரிஸ் பத்திரிகையாளர்கள் சந்திப்பில், வாணி போஜனிடம் கவர்ச்சி குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்துள்ள அவர், “கவர்ச்சியாக நடிக்கலாம்.. அதிலும் எல்லை ஒன்று இருக்கிறது. இப்போது சாதாரணமாக புடவை கட்டினால் கூட கவர்ச்சி என்கிறார்கள். காலம் மாற மாற நம் சிந்தனையும் மாற வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தான் கவர்ச்சியாக நடிக்க தயார் என்பதை தமிழ் திரையுலகிற்கு மறைமுகமாக கூறி உள்ளார் வாணி போஜன். வாணி போஜனின் முடிவால் அவரது ரசிகர்கள் பலரும் குஷி மோடுக்கு சென்றுள்ளனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

+1
0
+1
0
+1
0
+1
9
+1
0
+1
4
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *