world first cctv camera film

சிசிடிவி கேமிரா கோணத்தில் உலகின் முதல் படம்!

சினிமா

“கன்னட நடிகர் உபேந்திராவின் மனைவியான நடிகை பிரியங்கா, உலகிலேயே முதன்முறையாக முழுவதுமாக சிசிடிவி கேமராவின் கோணத்தில் படமாகியுள்ள ‘கேப்ச்சர்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். மேலும் இந்தப் படம் ஒரேயொரு லென்ஸை மட்டுமே பயன்படுத்தி படமாகியுள்ளதாம்.

ஸ்ரீதுர்கா பரமேஸ்வரி புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ரவி ராஜ், ஷாமிகா எண்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளார். ராதிகா குமாரசாமி இந்தப் படத்தை வழங்குகிறார்.

சிவராஜ்குமாரின் ‘டகரு’ படத்தின் மூலம் புகழ்பெற்ற மன்விதா காமத் இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மாஸ்டர் கிருஷ்ணராஜ் இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமாகிறார்.

நாவல்களை படமாக்குவதில் பெயர் பெற்ற இயக்குநர் லோஹித்.ஹெச் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். ‘மம்மி’ மற்றும் ‘தேவகி’ ஆகிய படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக பிரியங்காவுடன் இந்தப் படத்திற்காக கூட்டணி சேர்ந்துள்ளார் லோஹித்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தீபாவளியன்று வெளியானது. இந்தப் போஸ்டரில் சுற்றிலும் பல சிசிடிவி கேமராக்கள் சூழ்ந்திருக்கும் நிலையில் பிரியங்கா உபேந்திரா, முகம் முழுவதும் மிகுந்த ரத்தக் காயங்களுடன் காணப்படுகிறார். அதில் ஒரு கேமராவின் மீது ஒரு காகம் அமர்ந்திருப்பதையும் இந்தப் போஸ்டரில் நாம் பார்க்க முடிகிறது.

பிரியங்காவின் புன்னகை மற்றும் சந்தேகத்திற்கிடமான முகம், படம் குறித்து அதிகம் தெரிந்து கொள்ளும் எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இப்படி பதட்டம் ஏற்படுத்தும் போஸ்டர், இந்தப் படம் எதைப் பற்றியது என அறிந்து கொள்ளும் ஆவலையும் உருவாக்கியுள்ளது. இந்தப் படம் முழுவதும் கோவாவில் 30 நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

இராமானுஜம்

நடப்பு பாராளுமன்றத்திலேயே எங்களுக்கு நீதி கிடைக்காதா?

திருவண்ணாமலை தீபத்திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *