மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் (செப்டம்பர் 14) நிறைவடைந்தது.
இயக்குனர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன் திரைப்படத்தின் வாயிலாக ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலையும், அவர்களின் அரசியலையும் பதிவு செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து திமுக இளைஞரணிச் செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின், மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்தார்.
இந்தப் படத்திற்கு மாமன்னன் என்று பெயர் சூட்டப்பட்டது. கீர்த்தி சுரேஷ், பகத் ஃபாசில், வடிவேலு உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வந்தது.
இந்தநிலையில், மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் (செப்டம்பர் 14) நிறைவடைந்தது. இந்த அறிவிப்பை, மாரி செல்வராஜ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் தங்களது ட்விட்டர் பக்கத்தில், தெரிவித்துள்ளனர்.
நேற்று (செப்டம்பர் 13) மாமன்னன் திரைப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு நடைபெற்ற ஜருகுமலை பகுதி மக்களின் கோரிக்கையின்படி, உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பாக,
ஜருகு மலை அரசு பள்ளிக் கட்டிடத்தை புதுப்பிக்க ரூ.13.60 லட்சத்திற்கான காசோலையும், மலைப்பாதையில் அமைக்கப்பட உள்ள 10 கான்வெக்ஸ் மிரர், இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மளிகை கடை வைக்க மளிகை பொருட்கள், மாணவர்கள், திருநங்கைகள், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 55 பேருக்கு உதவி தொகை வழங்கப்பட்டது.
செல்வம்