“என்னை வச்சி செஞ்சிட்டாங்க” : உதயநிதி சுவாரஸ்ய பேச்சு!

சினிமா

இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் உதயநிதி- நிதி அகர்வாலும் ஜோடியாக நடித்துள்ள படம் ‘கலகத் தலைவன்’. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (நவம்பர் 10) மாலை சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

திமுகவின் பொதுக்கூட்டமேடை நிரம்பி வழிவது போன்று கலகத்தலைவன் இசை வெளியீட்டு விழா மேடை இருந்தது.

திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் உதயநிதியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வாழ்த்தி பேசி அவரை நெளிய வைத்தனர்.

உதயநிதி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க காத்திருப்பதாக மிஷ்கின், சுந்தர் சி இருவரும் விண்ணப்பம் போட்ட காமெடியும் நடந்தது.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,

“ஏற்கனவே நடித்துக்கொண்டிருக்கும், ஒப்புக் கொண்டிருக்கும் படங்களில் நடித்து முடித்துவிட்டு அரசியல் பணிக்கு செல்ல போகிறேன்” என்றார்.

”2019-ம் ஆண்டே இந்த ‘கலகத் தலைவன்’ படத்தில் நடிக்க ஒப்பு கொண்டுவிட்டேன்.  ஆனால் கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக படத்தை எடுத்துக் கொண்டே இருக்கிறார் இயக்குநர் மகிழ் திருமேனி.

ஒவ்வொரு காட்சிகளையும் செதுக்கி கொண்டே இருக்கிறார்” என குறிப்பிட்டார் உதயநிதி.

அப்போது இடைமறித்த இயக்குநர் மகிழ் திருமேனி..

“இந்தப் படம் ஆரம்பித்த உடனேயே இரண்டு முறை கொரோனா பொது முடக்கம் வந்துவிட்டது. அதன் பின்னர் உதயநிதி தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றுவிட்டார்.

அதன் பிறகு எனக்கு இரண்டு முறை கொரோனா வந்தது. மேலும் எந்த ஹீரோயினையும் பிடிக்கவில்லை என்றார் உதயநிதி. அதனால் ஹீரோயினையும் இன்னொரு பக்கம் தேடிக் கொண்டே இருந்தேன். 

இது போன்ற காரணங்களால் இந்தப் படம் தள்ளிக் கொண்டு போனது” என கூறினார்.

அதன் பின்னர் மீண்டும் உதயநிதி பேசும்போது, இயக்குநர் மகிழ் திருமேனி 90 நாட்கள் படத்தை எடுத்தார் என்றால்.. மாரி செல்வராஜ் 120 நாட்களுக்கு மேலாக ‘மாமன்னன்’ படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். இருவரும் என்னை வச்சி செய்கின்றனர்.

மகிழ் இயக்கிய ‘தடம்’ படத்திலேயே முதலில் நான்தான் நடிக்க இருந்தேன். எனக்கு அந்தக் கதை மிகவும் பிடித்திருந்தது.

ஆனாலும் ரெட் ஜெயன்ட் செண்பகமூர்த்தி நடிக்க விடவில்லை. இங்கு வருவோர் எல்லாரும் அவரைப் பார்த்துதான் வணக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

காரணம் அவர்தான் அனைவருக்கும் சம்பளம் நிர்ணயம் செய்கிறார். அந்தப் பாசம்தான் எல்லாருக்கும்” என பேசினார் உதயநிதி.

இராமானுஜம்

கிராமத்து கதையில் அசோக் செல்வன்

மருத்துவமனையில் ஜி.கே.மணி : நலம் விசாரித்த முதல்வர்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *