க்ரைம் த்ரில்லரில் உதயநிதியின் “கண்ணை நம்பாதே”!

சினிமா

எம்.எஸ் விஸ்வநாதன் இசையில் டி.எம்.சௌந்தர்ராஜன், எம்.ஜி.ஆர் நடித்த” நினைத்ததை முடிப்பவன்” படத்திற்காக பாடிய பாடல் வரிகள்தான் “கண்ணை நம்பாதே  அது உன்னை ஏமாற்றும் ” பாடல்.

1975ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் இடம் பெற்ற இப்பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர் உடன் இணைந்து மறைந்த நடிகை  மஞ்சுளா உச்சகட்ட கவர்ச்சி உடையில் நடனமாடியிருப்பார்.

அன்றைய காலகட்டத்தில் இசை தட்டு வடிவில் தமிழ்நாடு முழுவதும் விசேஷ வீடுகளிலும், அரசியல் பொதுக்கூட்டங்களிலும் அதிகம் பயன்படுத்தப்பட்ட பாடல்.

இந்த பாடலின் முதல் இரண்டு வார்த்தைகளான “கண்ணை நம்பாதே” எனும் பெயரில் தயாராகி இருக்கும் திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கிறார்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கலகத் தலைவன்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்தப் படத்தைத் தொடர்ந்து உதயநிதி நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம்தான் ‘கண்ணை நம்பாதே’. ‘

இந்த படத்தில் ஆத்மிகா, சதீஷ், பூமிகா சாவ்லா, பிரசன்னா, ஸ்ரீகாந்த், வசுந்தரா உட்பட பலர் நடித்துள்ளனர்.

சித்துக்குமார் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லிப்பி சினி கிராப்ட்ஸ் சார்பில் வி.என்.ரஞ்சித்குமார் தயாரிக்கிறார்.

இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் நேற்று (பிப்ரவரி 26) வெளியாகியுள்ளது. க்ரைம் த்ரில்லருக்கான அத்தனை அம்சங்களையும் கொண்ட திரைக்கதையில் படம் உருவாக்கப்பட்டுள்ளதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. திரைக்கதை என்னவாக இருக்கும் என்பதை கணிக்க முடியாத வகையில் அடுத்தடுத்த ‘கட்’உடன் கவனம் பெறுகிறது ட்ரைலர்

‘இந்த உலகத்துல நடக்குற எல்லா கொலைகளுக்குப் பின்னாடியும் அழுத்தமான காரணம் இருக்கும்’ என தொடங்கும் ட்ரெய்லர் கொலையை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளதை உணர்த்துகிறது.

இரவையொட்டிய காட்சிகளால் நீளும் ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. படம் வரும் மார்ச் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இராமானுஜம்

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது!

’’ஓம் வெள்ளிமலை’’ – ஒரு உலக சினிமா!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *