துனிஷா தற்கொலை: வெளியான காதலனின் ரகசியம்!
இந்தி நடிகை துனிஷா ஷர்மா கொலை வழக்கில், அவரது காதலர் ஷீசன் கானை, 14நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தி நடிகை துனிஷா ஷர்மா, கடந்த டிசம்பர் 24ஆம் தேதி, பால்கர் மாவட்டம் வசாய் பகுதியில் நடந்த படப்பிடிப்பின்போது, அங்கிருந்த கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது தொடர்பாக தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் சக நடிகரான ஷீசன் கானை போலீசார் கைதுசெய்தனர்.
துனிஷா தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் முதலில் கூறிய நிலையில், சக நடிகர் ஷீசன் கான் அவரது தற்கொலைக்கு தூண்டியதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
மேலும் அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஷீசன் கானை மும்பை போலீஸ் டிசம்பர் 25அன்று கைது செய்து தற்கொலைக்குத் தூண்டுதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் ஷீசன் கானை 4நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
போலீஸ் விசாரணையின்போது ஷீசன் கான், முறையாக ஒத்துழைக்கவில்லை என்றும், முன்னுக்குப் பின்னாக தகவல்களை அளிப்பதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து, போலீசார் துனிஷா மற்றும் ஷீசன் கான் இருவருக்கும் இடையேயான உரையாடல்களை அறிந்து கொள்வதற்காக, இருவரது செல்போன்களைகளையும் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்திருந்தனர்.
இந்த நிலையில், ”ஷீசன் கான் பல பெண்களுடன் அரட்டை அடிப்பதைப் பொழுபோக்காகக் கொண்டுள்ளார். அவர் நிறைய பெண்களுடன் பேசிய ஆடியோக்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதனாலேயே அவர் துனிஷாவைத் தவிர்க்கத் தொடங்கி இருக்கிறார். துனிஷா அவருக்கு தொடர்ந்து மெசேஜ் அனுப்பியும், அதற்கு பதிலளிக்காமல் தவிர்த்துள்ளார்” என தற்போது போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஷீசன் கானின் போலீஸ் காவல் இன்றுட முடிவடைந்ததை அடுத்து, போலீசார் அவரை, மகாராஷ்டிர மாநிலம் வசாய் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர்.
இதையடுத்து, ஷீசன் கானை 14நாள் நீதிமன்றக் காவலில் வைக்க வசாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெ.பிரகாஷ்
கார் விபத்து: டெல்லிக்கு மாற்றப்படும் ரிஷப் பண்ட்
கனவை நினைவாக்க உழைக்க வேண்டும்: முதல்வர் புத்தாண்டு வாழ்த்து!