மும்பையில் தொலைக்காட்சி நடிகை துனிஷா ஷர்மா தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அவரது முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் தொலைக்காட்சி நடிகை துனிஷா ஷர்மா தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு மிகுந்த பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
காரணம் ஒரு நடிகை படப்பிடிப்பு தளத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள வேண்டிய அவசியம்என்ன என்ற தகவல் தெரியாமல் இருப்பதுதான்.
துனிஷா மரணம் குறித்து அவரதுதாய் வாலிப், துனிஷாவுடன் அலி பாபா தஸ்தான் இ காபூல் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்த சகநடிகரும் அவரது முன்னாள் காதலருமான ஷீசன் முகமது கான்தான் துனிஷாவை தற்கொலைக்குத் தூண்டினார் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அதுமட்டுமின்றி, துனிஷாவும் ஷீசன் கானும் காதலித்து வந்ததாகவும் இருவரும் கடந்த 15நாட்களுக்கு முன்புதான் பிரிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் ஷீசன் முகமது கானை கைதுசெய்து தற்கொலைக்குத் தூண்டுதல் என்ற பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஷீசன் கானை 4நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மும்பை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த வழக்கு குறித்து ஷீசன் கான் வழக்கறிஞர் கூறுகையில், ”ஷீசன் கான் மீது ஆதாரமற்ற குற்றங்கள் சுமத்தப் படுகின்றன. தற்கொலைக்கான காரணமோ கடிதமோ கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த வழக்கில் வேறு தொடர்பும், லவ்ஜிஹாத், மிரட்டல் போன்ற காரணங்கள் எதுவும் இல்லை” என்றார்.
இந்நிலையில் நடிகை துனிஷாவின் மரணத்திற்குப் பலரும் ஒவ்வொரு காரணங்களை சமூக வலைத்தளங்களில் கூறிவருகின்றனர்.
இதில் குறிப்பாக, மாகாராஷ்டிராவை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ராம் கதாம் துனிஷா மரணத்திற்குப் பின்னால் லவ்ஜிஹாத் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

அவரது மரணத்திற்கு உண்மையான நீதிவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
துனிஷா மரணத்திற்குச் சரியான காரணம் என்ன என்பது தெரிய வராத நிலையில் பாஜக எம்.எல்.ஏ கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோனிஷா
தேனாண்டாள் பிலிம்ஸுக்கு உதவும் லைகா நிறுவனம்!
சீனாவில் இருந்து இந்தியா வந்தவருக்கு கொரோனா!