ttf vasan licence going to be cancelled

டிடிஎஃப் வாசன் லைசென்ஸ் ரத்து?

சினிமா

வீலிங் செய்தபோது விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய தமிழக போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை செய்துள்ளது.

பைக் ரேஸரும், பிரபல யூ டியூபருமாக வலம் வருபவர் டிடி எஃப் வாசன். இவர் அம்பத்தூரில் உள்ள அவரது வீட்டில் இருந்து மகாராஷ்டிராவிற்கு பைக்கில் செல்ல முடிவு செய்தார்.

அதன்படி சென்னை- பெங்களூரு சாலையில் சென்று கொண்டிருந்தபோது பைக்கில் வீலிங் சாகசம் செய்ய முயன்றார்.

அப்போது பைக்கின் பின்புறம் தரையில் உரசிய நிலையில் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் இருந்து விலகி அருகில் பள்ளத்தில் விழுந்தது.

டிடிஎஃப் வாசன் பைக்கில் இருந்து குதித்து தப்பிக்க முயன்ற நிலையில் படுகாயமடைந்தார்.

அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு பரிசோதனையில் கையில் முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. பின்னர், சிகிச்சை அளிக்கப்பட்டு, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதற்கிடையே விபத்து நடந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலான நிலையில்,

மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் டிடிஎஃப் வாசன் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர்.

இதனையடுத்து அவருடைய பைக் பறிமுதல் செய்யப்பட்டு காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் 279 IPC (மனித உயிருக்கு ஆபத்து உண்டாகும் வகையில் அல்லது காயம் அல்லது தீங்கு ஏற்படும் விதத்தில், ஒரு வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டுவது) மற்றும் 338 IPC (பிறருடைய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் முறையில் அசட்டுத் துணிச்சலுடன் வாகனத்தை இயக்குவது) உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் டிடிஎஃப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்தகட்ட நடவடிக்கையாக,  மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் தொடர்ந்து பைக் சாகசத்தில் ஈடுபட்டு வரும்  டிடிஎஃப்ப் வாசனின் ஓட்டுநரின் உரிமத்தை ரத்து செய்ய தமிழக போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை செய்துள்ளது.

இந்திய மோட்டார் வாகன சட்டம் 19-ன் படி பொது மக்களுக்கு விபரீதம் ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டினார் என்ற குற்றத்தின் அடிப்படையில் டிரைவிங் லைசன்ஸை ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் தற்கொலை!

தண்ணீருக்காக ஊருக்குள் வரும் வனவிலங்குகள்: பொதுமக்கள் அச்சம்!

+1
0
+1
0
+1
0
+1
7
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *