மஞ்சள் வீரன் படத்தில் இருந்து டிடிஎப் வாசன் நீக்கம்… பின்னணி இதுதான்!

சினிமா

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் மஞ்சள் வீரன் என்ற படத்தில் நடித்து வந்தார். இந்த படம் எப்போது வெளியாகும் என்று அவரது ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருந்தனர். இதற்கிடையே .  மஞ்சள் வீரன் படத்தில் இருந்து யூடியூபர் டிடிஎஃப் வாசன் நீக்கப்பட்டுள்ளதாக  இயக்குநர் செல்வம் அறிவித்துள்ளார்.

கோவையைச் சேர்ந்த பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன். யூடியூப் சேனலை நடத்தி வந்த இவர், பைக் சாகசங்களில் ஈடுபட்டு அதை வீடியோவாக எடுத்து இணையத்தில் பகிர்ந்து வந்தார் . பல சர்ச்சைகளில் சிக்கி வந்தார். இப்போது, அவரின் லைசென்சும் பறிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திடீரென தமிழ் சினிமாவில் நடிக்க முடிவு செய்தார் . இயக்குநர் செல்வம்  இயக்கத்தில் மஞ்சள் வீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார். கையில் சூலத்தோடு ஆக்ரோஷமாக பைக் ஓட்டுவது போன்ற பர்ஸ்ட் லுக் போட்டோ கூட வெளியானது.

இந்த படத்தின் ஷூட்டிங் சில நாட்கள் மட்டுமே நடந்ததாகச் சொல்லப்பட்டது. 35 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்துள்ளன. இவை, ஹீரோ சம்பந்தப்படாத காட்சிகள் ஆகும்.  அதன் பிறகு சில காரணங்களால் ஷூட்டிங் நடைபெறவில்லை.

இந்த நிலையில், மஞ்சள் வீரன் படத்தில் இருந்து டிடிஎஃப் வாசன் நீக்கப்பட்டுள்ளாராம். இதை படத்தின் இயக்குநர் செல்வம் உறுதி செய்துள்ளார்.  எதற்காக டிடிஎஃப் வாசன் நீக்கப்பட்டார் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், தொடர்ந்து சர்ச்சையில் சிக்குவதால் படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும், டிடிஎஃப் வாசனுக்கு பதிலாக வேறு ஒரு நடிகர் மஞ்சள் வீரன் படத்தில் நடிக்கிறாராம்.  அக்டோபர் 15ஆம் தேதி புதிய ஹீரோ யார் என்பது பற்றி தகவல் வெளியிடப்படும்.

இது குறித்து இயக்குநர் செல்வம் கூறுகையில், எனக்கு டிடிஎப். வாசனுடன் பணி புரிய ஆசைதான். ஆனால், தற்போது நேரம் அமையவில்லை என்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 செப்டம்பர் மாசத்துல இத்தனை லட்சம் பேர் மெட்ரோ பயணமா?

அன்புமணியை காப்பாற்ற ராமதாஸ் பாஜகவில் தஞ்சம்: ஆர்.எஸ்.பாரதி

+1
0
+1
6
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *