தில் ராஜுவால் விஜய் படத்துக்கு சிக்கல்!

சினிமா

தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிப்பில், தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தி விஜய் நடித்து முடித்துள்ள படம் ‘வாரிசு’. 

தமிழ், மற்றும் தெலுங்கில் இந்தப்படம் தயாரிக்கப்படுவதாகவும், 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி படம் இரண்டு மொழிகளிலும் வெளியிடப்படும் என்றும் படத்திற்கான பூஜை நடைபெற்ற அன்று தெரிவிக்கப்பட்டது.

படம் முடிந்து அது சம்பந்தமான வியாபாரங்களையும் தயாரிப்பு தரப்பு முடித்துவிட்டார்கள்.

வரும் ஜனவரி 12 அன்று வாரிசு ரீலீஸ் என்ற அறிவிப்பும் அதிகாரபூர்வமாக வெளியானது.

தெலுங்கு தேசத்தில் தனக்கான வியாபார எல்லையை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் தில்ராஜு தயாரிப்பில் நடிக்க ஒப்புக்கொண்டார் விஜய்.

தமிழகத்தில் அஜித்குமார் நடித்துள்ள துணிவு படத்துடன் நேரடியாக களம் இறங்குவது போன்று சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, பிரபாஸ் நடிப்பில் வெளியாகும் படங்களுடன் விஜய் நடிக்கும் வாரிசு தெலுங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையால் வாரிசு படம் ஆந்திரா, தெலங்கானாவில் வெளியாவதில் தடை ஏற்பட்டுள்ளது.

வாரிசு’ படம் நேரடி தமிழ்ப் படம் மட்டும்தான். தெலுங்கில் ‘வாரிசுடு‘ என்ற பெயரில் மொழி மாற்றம்செய்யப்படுவதை நேரடியாக கூறாமல் மறைமுகமாக கூறியிருந்தார் தயாரிப்பாளர் தில்ராஜு.

தமிழ்நாட்டில் பொங்கல் போன்று, தெலுங்கு மொழி பேசும் மக்கள் அதே நாளில் மகரசங்கராந்தி பண்டிகையை கொண்டாடுவார்கள். அதனால் இந்த வருடம் பாலகிருஷ்ணா நடிக்கும் ‘வீர சிம்ம ரெட்டி’, சிரஞ்சீவி நடிக்கும் ‘வால்டர் வீரய்யா’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.

2019ம் ஆண்டு பொங்கல் வெளியீட்டின் போது தெலுங்கில் “என்டிஆர் கதாநாயகடு, வினய விதேய ராமா, எப் 2” ஆகிய படங்கள் வெளிவந்தன.

அப்போது ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தையும் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட முடிவு செய்த போது ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் அதிக தியேட்டர்கள் கிடைக்கவில்லை.

படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை வாங்கி வெளியிட்ட வினியோகஸ்தர் அசோக் வல்லபனேனி ‘பேட்ட’ தெலுங்கு படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்க சிலர் தடையாக இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.

பல முறை வேண்டுகோள் விடுத்தும் பட வெளியீட்டிற்கும், தனக்கும் தொல்லை தருவதாக கூறியிருந்தார். அவர் குற்றம் சாட்டியவர்களில் ‘எப் 2’ தெலுங்குபடத்தின் தயாரிப்பாளரான தில் ராஜுவும் ஒருவர்.

Trouble for Vijay film varisu because of Dil Raju

அப்போதே, “நான் யாருக்கும் தொல்லை கொடுக்கவில்லை. அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள நமது தெலுங்குப் படங்களுக்கு தியேட்டர்கள் வேண்டும். மூன்று தெலுங்குப் படங்களுக்கே தியேட்டர்கள் கொடுக்க முடியவில்லை,” என்று தில் ராஜு பதிலளித்ததாக செய்திகள் வெளியானது 

2023 பொங்கலுக்கும் தெலுங்குத் திரையுலகத்தின் இரண்டுபெரிய ஹீரோக்களின் படங்கள் வெளிவர உள்ளன.

அவற்றிற்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் இருக்கும். இந்நிலையில் நேரடி தெலுங்கு படங்கள்தான் முக்கியம் என இப்போது தில் ராஜு பேசுவாரா என தற்போது தெலுங்கு சினிமாவில் கேள்வி எழுப்பபட்டு வருகிறது.

தமிழிலிருந்து தெலுங்கிற்கு டப்பிங் ஆகி வர உள்ள ‘வாரிசுடு‘ படத்தையும் அப்போது ‘பேட்ட’ படத்தை டீல் செய்தது போல இப்போது தனது ‘வாரிசுடு’ படத்தை டீல் செய்வாரா தில் ராஜு என கேட்கப்பட்டு வந்த நிலையில்.நேரடி தெலுங்கு படங்களுக்கே அதிகளவு தியேட்டர்கள் ஒதுக்க வேண்டும் என்று 2017ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சுட்டிக்காட்டி தெலுங்குப்படங்களுக்கே திரையரங்குகள் முன் உரிமை கொடுக்க வேண்டும் என அறிக்கை ஒன்றை தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.

இந்த முடிவை ஆந்திரா, தெலங்கானா மாநிலத்தில் உள்ள திரையரங்குகள் கடைப்பிடிப்பார்கள் என்பதால் விஜய் எதிர்பார்த்ததுபோல் அதிகமான திரையரங்குகள் கிடைக்காது.

இராமானுஜம்

இசைக் கலைஞர்களுடன் ஆரவாரம் செய்த ராகுல்

கெர்சன் நகர் மீட்பு: ஜெலன்ஸ்கியின் சபதம்!

+1
0
+1
2
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *