கமலுடன் த்ரிஷா… வைரலாகும் ’தக் லைஃப்’ போட்டோ!

Published On:

| By Kavi

தக் லைப் படப்பிடிப்பு தளத்தில் கமலுடன் த்ரிஷா எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் 38 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் – இயக்குநர் மணிரத்னம் கூட்டணி இணைந்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில், கமல் நடிப்பில் தக் லைப் திரைப்படம் தயாராகி வருகிறது.

இதற்கான படப்பிடிப்பு முதலில் சென்னையிலும் தொடர்ந்து செர்பியாவிலும் நடைபெற்றது.

செர்பியாவில் நடந்த படப்பிடிப்பில் கமல், த்ரிஷா ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது எடுத்த புகைப்படத்தை த்ரிஷா தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

கமலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவுசெய்துள்ள த்ரிஷா, “மனதுக்கு நல்லவர்கள் என தோன்றுபவர்கள், நம்மை ஊக்குவித்து நம்பிக்கையூட்டும்படியான நபர்கள் சுற்றி இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே  த்ரிஷா கமலுடன் மன்மதன் அம்பு, தூங்கா வனம் ஆகிய படத்தில் நடித்துள்ளார்.

தக் லைப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

சரத்குமார் திரைவாழ்வில் திருப்புமுனை தந்த ‘சேரன் பாண்டியன்’!

கோடை வெயில்… தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share