பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் நடிகை த்ரிஷாவுக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. 96 படத்தின் வெற்றிக்கு பின்னர் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நடிகை த்ரிஷாவுக்கு, திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது பொன்னியின் செல்வன் தான்.
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான இதில் குந்தவை கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்திருந்தார் என்று சொல்வதைவிட வாழ்ந்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும், அந்த அளவுக்கு எதார்த்தமாக நடித்திருந்தார்.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் நடிகை த்ரிஷாவுக்கு கோலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது நடிகர் விஜய்க்கு ஜோடியாக ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார் த்ரிஷா.
மேலும், நடிகர் அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’, கமல் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் படம், தனுஷின் 50-வது படம் , வெப் தொடர் ஒன்று, தி ரோடு மற்றும் மலையாளத்தில் மோகன்லால் – ஜீத்து ஜோசப் கூட்டணியில் உருவாகும் ராம் என்கிற படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார் த்ரிஷா. இதனிடையே இவர் நடிப்பில் உருவாகியுள்ள சதுரங்க வேட்டை 2 திரைக்கு வர தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த மே 4 ஆம் தேதி நாற்பதாவது பிறந்தநாளைக் கொண்டாடினார் த்ரிஷா. இத்தனை வயதிலும் இவ்வளவு படங்களா என்று தென்னிந்திய சினிமா உலகமே த்ரிஷாவை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருக்கிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஓசியில் பிரட் ஆம்லெட் கேட்டு தகராறு : 4 போலீஸார் இடைநீக்கம்!