விஜய்யின் லியோ படத்தில் இருந்து த்ரிஷா விலகுகிறாரா?

நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகிவரும் லியோ படத்தில் இருந்து நடிகை த்ரிஷா வெளியேறியதாக ஒரு செய்தி இணையதளங்களில் பரவி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து வரும் படம் ’லியோ’. செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

லியோவின் ப்ரோமோ கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

லியோ படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார் த்ரிஷா. ஏற்கனவே குருவி, கில்லி, ஆதி, திருப்பாச்சி போன்ற படங்களில் விஜய்யுடன் நடித்த த்ரிஷா தற்போது 5வது முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார். 14 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.

இந்நிலையில், லியோவில் இருந்து நடிகை த்ரிஷா வெளியேறிவிட்டதாக ஒரு செய்தி சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. இந்த குழப்பத்திற்கு த்ரிஷா தான் காரணம்.

ஏனெனில், லியோவில் நடிப்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதும், அவரைப் பற்றி நெட்டிசன்கள் வெளியிட்ட பல ட்வீட்களை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ரீ-ட்வீட் செய்தார்.

ஆனால் தற்போது அந்த ட்வீட்களில் பெரும்பாலானவற்றை அவர் நீக்கியுள்ளார். தற்போது ஒட்டுமொத்த படக்குழுவினரும் காஷ்மீரில் முகாமிட்டுள்ள நிலையில் நடிகை த்ரிஷா மட்டும் மூன்றே நாளில் சென்னை திரும்பினார்.

இதனால் தான் அவர் லியோ படத்தில் இருந்து விலகி விட்டதாக செய்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

அதே நேரம், ரீ-ட்வீட்களை சில நாட்களில் நீக்குவது அவரது வழக்கம் என்றும், அதனால்தான் லியோ படம் குறித்த பதிவுகளை அவர் நீக்கிவிட்டார் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மு.வா.ஜெகதீஸ் குமார்

இடைத்தேர்தல்: தென்னரசு வேட்புமனு தாக்கல்!

தமிழகத்திலும் மாதவிடாய் விடுமுறை அளிக்கப்படுமா?

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts