trisha plays a cameo in goat movie
வெங்கட் பிரபு – விஜயின் ‘GOAT’ படத்தில் முன்னணி நடிகை ஒருவர் இணைந்துள்ளார். அதுகுறித்த விவரங்களை இங்கே பார்ப்போம்.
தளபதி விஜயின் 68-வது படமாக உருவாகி வரும் படத்தில் அவருக்கு ஜோடியாக சினேகா, மீனாட்சி சௌத்ரி நடித்து வருகின்றனர். அதோடு லைலாவும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
நண்பர்களாக பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோரும் வில்லனாக மோகனும் நடித்து வருகின்றனர். மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களும் ஒருசில காட்சிகள் ஏஐ தொழில்நுட்பம் மூலமாக வருகிறார். கதைப்படி இரண்டு விஜயில் ஒருவர் வில்லனாக வருகிறாராம்.
அவருக்கு உதவி செய்யும் வில்லனாக மோகன் நடித்து வருவதாக தெரிகிறது. இந்த படத்தினை ஒரு சயின்ஸ் பிக்ஷன் படமாக வெங்கட் பிரபு எடுத்து வருகிறார். யுவன் இசையில் பாடல்கள் வேகமாக உருவாகி வருகின்றன.
படமானது தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. விஜயின் 5௦-வது பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதி ‘GOAT’ திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தநிலையில் லேட்டஸ்ட் அடிஷனாக முன்னணி நடிகை ஒருவர் இப்படத்தில் இணைந்துள்ளார்.
ரசிகர்களின் பேவரைட் நடிகையான திரிஷா தான் இப்படத்தில் இணைந்திருக்கிறார். சிறப்புத்தோற்றத்தில் வரும் அவருக்கு படத்தில் ஒரு பாடலும் இருக்கிறதாம்.
பொதுவாக சிறப்புத்தோற்றங்களில் அதிகம் நடித்திராத திரிஷா இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் தளபதி விஜய்க்காக இப்படத்தில் நடித்து கொடுத்துள்ளார். trisha plays a cameo in goat movie
முன்னதாக ‘ஆதி’, ‘கில்லி’, ‘திருப்பாச்சி’, ‘குருவி’, ‘லியோ’ படங்களில் விஜய்-திரிஷா இணைந்து நடித்துள்ளனர். இந்த படங்களில் இருவரின் கெமிஸ்ட்ரியும் நன்றாக இருந்தது. ரசிகர்கள் மத்தியிலும் இந்த ஜோடிக்கு என தனித்த வரவேற்பு உள்ளது.
எனவே செண்டிமெண்டாக இப்படத்திலும் திரிஷாவை நடிக்க கௌரவ தோற்றத்தில் நடிக்க வைத்துள்ளனர். பாடல் காட்சியில் விஜய்-திரிஷா இணைந்து நடித்திருக்கிறார்களா? இல்லை திரிஷா மட்டும் நடித்துள்ளாரா? என்பது தெரியவில்லை.
படக்குழு இந்த விவரங்களை ரகசியமாக வைத்திருந்தாலும் தற்போது தகவல்கள் கசிந்து விட்டன. எனவே இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்களா? என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இரட்டை காதணி அல்லது இரட்டை மின்விளக்கு.. ஓ.பன்னீர்செல்வம் அணி முடிவு!
GOLD RATE: நகைக்கடை பக்கமே போக முடியாது போல!