அரசியலில் திரிஷா… தாயார் சொல்வது என்ன?

Published On:

| By Kumaresan M

நடிகை திரிஷா சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டு அரசியலில் நுழைய போவதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவி வந்தது.

தனது 20 ஆண்டு கால சினிமா வாழ்க்கையை அவர் துறந்து விட இருப்பதாகவும், தனது நண்பர் நடிகர் விஜய்யை பின்பற்றி அரசியலுக்கு நுழைய திட்டமிட்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், அரசியலில் நுழைய அவரின் தாயார் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் சொல்லப்பட்டது.

திரிஷா தனக்கு வருகிற பெரும்பாலான வாய்ப்புகளை எல்லாம் நிராகரித்து வருகிறார். இது அவரது தாயாருக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்று கூறுகிறார்கள்.

போதுமான அளவு பணம் சம்பாதித்து விட்டு, கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம் அல்லது துறையை மாற்றலாம் என்கிற எண்ணம் திரிஷாவுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. எனினும், சூர்யா 45, தக் லைஃப் படங்களுக்கு பிறகு அவர் தனது சினிமா வாழ்க்கை குறித்து முக்கிய முடிவெடுப்பார் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கிடையேதான் அரசியலுக்குள் அவர் நுழைவதாகவும் வதந்தி பரவியது.

இதுதொடர்பாக மனோரமா நியூசுக்கு திரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார். ”எனது மகள் சினிமாவை விட்டு விலகப் போவதில்லை. அரசியலுக்கும் வரப் போவதில்லை. இந்த செய்தி ஆதாரமற்றது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share