நடிகை திரிஷாவுக்கு நாய்கள் என்றால் செல்லம். யாராவது நாய்களை துன்புறுத்துவதை பார்த்தால் கொதித்து எழுந்து விடுவார்.
நடிகை திரிஷா 9 ஆண்டுகளுக்கு முன்பு ஹைதராபாத் சாலையில் அனாதையாக கிடந்த ஒரு நாய்க்குட்டியை தூக்கி வந்து, தன் சென்னை வீட்டில் வைத்து வளர்த்தார். அதற்கு காட்பரி என பெயரிட்டிருந்தார்.
அந்த நாய் மீது திரிஷா அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். படப்பிடிப்பு நேரங்களில் ஓய்வில் இந்த நாயுடன்தான் விளையாடுவார். விதவிதமான ஆடைகள் அணிவித்து அழகு பார்ப்பதும் உண்டு. இந்த நாய்க்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

உடனடியாக, கால்நடை மருத்துவமனையில் சேர்த்தார். டாக்டர்கள் பரிசோதித்து வயிற்றில் கட்டி இருப்பதாக கூறினர். அதை அகற்ற அறுவை சிகிச்சை செய்த போது, காட்பாரி இறந்து போய் விட்டது. திரிஷா மனமுடைந்து போய் விட்டார்.
இதையடுத்து ஷாரோ என்ற மற்றொரு நாயை திரிஷா வளர்த்து வந்தார். காட்பாரி போலவே இந்த நாயும் திரிஷா மீது அளவற்ற பாசத்தை காட்டியது. ஷாரோதான் திரிஷாவின் எல்லா மன சோர்வுக்கும் அரு மருந்தாக இருந்தது. இந்த நிலையில், ஷாரோ நாயும் இறந்து போய் விட்டது. இதனால், திரிஷா மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தன் இன்ஸ்டா பதிவில் அவர் கூறியுள்ளதாவது, “எனது மகன் ஷாரோ உயிரிழந்து போய் விட்டான். கிறிஸ்துமஸ் தினத்தன்று காலையில் எங்களை விட்டு அவன் பிரிந்து விட்டான்.
என்னை அறிந்தவர்களுக்கு நான் பூஜ்யமாகி விட்டேன் என்று இப்போது தெரியும். இந்த அதிர்ச்சியில் இருந்து நானும் எனது குடும்பத்தினரும் எப்படி வெளியே வரப் போகிறோம் என்று தெரியவில்லை” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
இன்னுயிர் காப்போம் திட்டம்: காப்பீடு தொகை 2 லட்சமாக உயர்வு!
அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை… எடப்பாடி கண்டனம்!