நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய, நடிகர் மன்சூர் அலிகான் மீது போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நடிகை திரிஷா உடன் லியோ படத்தில் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்று சர்ச்சைக்குரிய வகையில் நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக, அவரின் பேச்சுக்கு நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரத்தில் திரிஷாவுக்கு ஆதரவாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடங்கி தெலுங்கு திரையுல உச்ச நட்சத்திரமான சிரஞ்சீவி, நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் திரையுலக வட்டாரங்களில் மிகுந்த அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் டிஜிபிக்கு அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில் இன்று (நவம்பர் 21) சென்னை நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் நடிகர் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அடுத்தகட்டமாக அவருக்கு சம்மன் அனுப்பி இதுகுறித்து விசாரணை நடத்த இருப்பதாக நுங்கம்பாக்கம் போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
டிஜிட்டல் திண்ணை: அமைச்சர் துரைமுருகனுக்கு அமலாக்கத்துறை சம்மன்… மொத்தமும் கொட்டிய முத்தையா?
’ஆடு மேய்ச்சா நீ ஆண்டவரா?: குய்கோ டிரெய்லர் வெளியானது!