விஜய்யின் 67ஆவது படத்தில் இணைந்துள்ள த்ரிஷா தன்னை சுற்றிவரும் வதந்திக்கு விளக்கம் அளிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் விஜய் நடிக்கும் ’லியோ’ படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார் த்ரிஷா.
லியோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மூணாறிலும் நடைபெற்ற நிலையில், தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்தி வருகின்றனர்.
இதற்காக கடந்த மாத இறுதியில் படக்குழுவினர் அனைவரும் தனி விமானம் மூலம் காஷ்மீருக்கு சென்றனர். அப்போது நடிகை த்ரிஷாவும் உடன் சென்றிருந்தார்.
காஷ்மீரில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்ட மூன்றே நாளில் நடிகை த்ரிஷா காஷ்மீரில் இருந்து கிளம்பியதாக செய்திகள் வெளியானது. அவர் லோகேஷிடம் சண்டையிட்டு கோபத்தில் சென்னை திரும்பிவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவத் தொடங்கின.
ஆனால் இது உண்மையில்லை என்பதை நடிகை த்ரிஷாவின் தாயார் உமா சமீபத்திய பேட்டி மூலம் உறுதிப்படுத்தினார்.
இருப்பினும் அவர் காஷ்மீரில் இருந்து டெல்லி வந்து தங்கி இருந்தது ஏன் என்கிற கேள்வி எழுந்து வந்தது. தற்போது அதற்கு விடைகிடைத்துவிட்டது.
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறதாம். அந்த குளிரை தாங்க முடியாததால் நடிகை த்ரிஷா, டெல்லிக்கு வந்து, அங்குள்ள ஓட்டலில் தங்கி இருந்தாராம்.
இதையடுத்து தற்போது மீண்டும் காஷ்மீருக்கு கிளம்பி சென்றுள்ளார் த்ரிஷா. அவர் விமானத்தில் சென்றபோது காஷ்மீர் முழுவதும் பனியால் சூழப்பட்டு இருக்கும் காட்சியை விமானத்தில் இருந்து வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவு மூலம் லியோ படத்தில் இருந்து தான் விலகியதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் த்ரிஷா.
லியோ படக்குழுவினர் காஷ்மீரில் 2 மாதங்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அங்கு தற்போது நிலவிவரும் பனிப்பொழிவின் காரணமாக சீக்கிரமாக படப்பிடிப்பை முடித்துக்கொண்டு மீண்டும் சென்னை திரும்பும் ஐடியாவில் உள்ளார்களாம்.
இதனால் அங்கு காட்சிகளை வேகமாக படமாக்கி வருகிறாராம் லோகேஷ் கனகராஜ்.
இராமானுஜம்
பரோட்டா மாஸ்டரான செஞ்சி மஸ்தான்: இஸ்த்ரி மேனான ஆர்.பி.உதயகுமார்
2 கைக்குழந்தைகள் உட்பட 4 பேர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை!