அல்லு அர்ஜூன் நடிக்கும் தெலுங்கு படத்தில் த்ரிஷா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த வருடம் பொன்னியின் செல்வன் படம் வெளியான பின்பு த்ரிஷா மீண்டும் தென்னிந்திய கதாநாயகிகள் பட்டியலில் வெளிச்சத்திற்கு வந்தார்.
உடனடியாக விஜய்க்கு ஜோடியாக லியோ படத்திலும், விடாமுயற்சி படத்தில் அஜித்குமாருக்கு ஜோடியாகவும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
லியோ படம் வெளியாகிவிட்டது. அஜித்குமாருடன் விடாமுயற்சி, மலையாளத்தில் மோகன்லாலுடன் ராம், மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக் லைப் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்தநிலையில், தெலுங்கில் திரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் அவரது 22வது படத்திலும் த்ரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த படம் ரூ.300 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராக உள்ளது. ஏற்கனவே 2005-ஆம் ஆண்டில் திரிவிக்ரம் இயக்கிய அதாடு என்ற படத்தில் த்ரிஷா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…