ட்ரெண்டாகும் 70ஸ் கவர்ச்சி நாயகி!

சினிமாவில் வாய்ப்பு தேடவும், கிடைத்த வாய்ப்பை தக்கவைக்கவும் அரைகுறை கிளாமர் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்வது சாதாரண நிகழ்வாகிவிட்டது.

ஆனால் 1980களில் மேலாடையே இல்லாமல் குளியல் காட்சியில் நடித்து இந்திய சினிமாவில் அதிர்வுகளை ஏற்படுத்திய இந்தி நடிகை ஜீனத் அமன்.

இந்தி திரையுலகில் 1970களில் சினிமா ரசிகர்களின் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் ஜீனத் அமன்.

Trending 70s glamor heroine

சத்யம் சிவம் சுந்தரம் இந்திப்படம் 1970 ஆம் ஆண்டு வெளியானது. ராஜ்கபூரின் சொந்தப்படம். அதில் ஹீரோயினாக நடித்தவர் ஜீனத்.

படத்தில் கவர்ச்சி தூக்கலாக இருக்கும். ஜாக்கெட் ஏதும் அணியாமல் அப்பவே இவர் அருவியில் குளிக்கும் காட்சிகள் இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

1980களில் சில்க் ஸ்மிதாவின் கிளாமர் பாதைக்கு வழிகாட்டியும் ஜீனத் அமன் தான்.

அப்படி 70களில் இந்திய சினிமாவை தனது தூக்கலான கவர்ச்சியால் கட்டிப்போட்டு வைத்தவர் தான் பாலிவுட்டின் மூத்த நடிகை ஜீனத் அமன்.சத்யம் சிவம் சுந்தரம், குர்பானி  படமெல்லாம் ஜீனத் அமனுக்காகவே ஓடியது.

ஆங்கில நடிகை போன்ற தோற்றம் கொண்ட ஜீனத் அமன் கவர்ச்சிக்காக டூ பீஸ் உடையிலும் நடிக்க தயங்காதவர்.

Trending 70s glamor heroine

ஒரேயொரு வெள்ளை சேலையை மட்டும் உடுத்திக் கொண்டு ஜாக்கெட் மற்றும் உள்ளாடை ஏதும் அணியாமல் ஜீனத் அமன் நடிக்கும் காட்சிகளை பார்க்கவே ஆண்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு படையெடுத்துச் சென்றனர்.

இந்நிலையில், ஜீனத் அமன் இந்த வயதில் எப்படி இருக்கிறார் என்கிற அவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகின்றன.

உர்ஃபி ஜாவேத் மற்றும் ஆகான்ஷா புரி உள்ளிட்ட நடிகைகள் ஜீனத் அமன் போட்டோக்களை எடுத்து பதிவிட்டு வருகின்றனர்.

Trending 70s glamor heroine

இந்தி சினிமாவின் இளம் நடிகை ஆகான்ஷா புரி எவர்க்ரீன் கவர்ச்சி நடிகையான ஜீனத் அமனை சந்தித்து சில மணி நேரங்கள் பேசியதற்கு நான் ரொம்பவே கொடுத்து வைத்திருக்கணும் என தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

70 வயதிலும் திடகாத்திரமாக இருக்கும் ஜீனத் அமனின் போட்டோக்களை பதிவு செய்துள்ளார். 1970களில் மிஸ் இந்தியா போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்த ஜீனத் அமன்,

கடந்த 2018ம் ஆண்டு மும்பையை சேர்ந்த தொழிலதிபர் அமர் கன்னா என்பவர் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கிறார் என பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்து மீண்டும் மீடியா வெளிச்சம் அடைந்த நிலையில்,

4 வருடங்கள் கழித்து மீண்டும் ஜீனத் அமன் சக நடிகை மூலம் சமூக வலைதளத்தில் சோஷியல்  டிரெண்டாகி வருகிறார்.

இராமானுஜம்

சமந்தாவின் ‘யசோதா’- விமர்சனம்!

கிரிக்கெட் லைவ் ஸ்டீரிமிங்: களமிறங்கும் அமேசான்

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts