நடிகர் தனுஷ் தற்போது தனது 51 வது படத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார். இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்குகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து D 51 படத்தை தயாரிக்கிறது.
இந்த படத்தில் நடிகர் தனுஷ் உடன் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மற்றும் நடிகை ராஷ்மிகா ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பான் இந்தியா படமாக இது உருவாகிறது.
தற்போது D 51 படத்தின் படப்பிடிப்பு திருப்பதி அலிபிரி பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
D 51 படப்பிடிப்பு அலிபிரியில் நடைபெறுவது திருப்பதி செல்லும் வெளியூர் பக்தர்களுக்கு தெரியவந்ததால் படப்பிடிப்பை காண மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், கோவிலுக்கு செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்த தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து போக்குவரத்து நெரிசலை சீர் செய்தனர். தனுஷின் D 51 படப்பிடிப்பினால் அந்த இடமே ஒரு சில மணி நேரத்திற்கு பரபரப்பாக காணப்பட்டது.
இந்தநிலையில், திருப்பதியில் தனுஷ் படத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து திருப்பதி எஸ்.பி பரமேஸ்வர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
D 51 படத்திற்கு தாராவி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: தமிழகம் முழுவதும் இன்று தொடங்குகிறது!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
பியூட்டி டிப்ஸ்: சருமம் பளபளக்க… வீட்டிலேயே வெந்தய பேக்!
கிச்சன் கீர்த்தனா: ஸ்பைசி பொட்டேடோ பாஸ்தா