Tovino Thomas Nadikar Thilakam

டொவினோ தாமஸ் படத்தின் டைட்டில் மாற்றம்: காரணம் இதுதான்!

சினிமா

Tovino Thomas Nadikar Thilakam

மின்னல் முரளி, தல்லுமல்லா, 2018 போன்ற படங்களின் மூலம் இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் மலையாள நடிகர் டொவினோ தாமஸ். இவர் தமிழில் நடிகர் தனுஷின் மாரி 2 படத்தில் வில்லனாக நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

சில மாதங்களுக்கு முன் டொவினோ தாமஸ் நடிப்பில் “நடிகர் திலகம்” என்ற புதிய படத்தின் போஸ்டர் வெளியானது. இந்த படத்தினை பிரபல மலையாள நடிகர் லாலின் மகன் ஜுன் பால் லால் இயக்கியுள்ளார்.

இந்த போஸ்டர் வெளியானவுடன் இந்த படத்தின் தலைப்பை கண்ட ரசிகர்கள் பிரபல நடிகர் சிவாஜி கணேசன் அவர்களின் திரைப் பட்டமான “நடிகர் திலகம்” என்பதை படத்தின் டைட்டிலாக வைத்ததற்கு வருத்தம் தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் தலைப்பை படக்குழு மாற்றி உள்ளது. “நடிகர் திலகம்” என்று வைக்கப்பட்டிருந்த டைட்டில் தற்போது “நடிகர்” என்று மாற்றப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் புரோமோஷன் விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சிவாஜி கணேசன் மகனும் நடிகருமன பிரபு,

“நடிகர் திலகம் என்ற தலைப்பில் ஒரு படம் வெளியாக போகிறது என்று எனக்கு தெரியாது. சில ரசிகர்கள் சொல்லி தான் இந்த படத்தை பற்றி நான் கேள்விப்பட்டேன்.

நடிகர் திலகம் என்ற அந்த வார்த்தை சிவாஜி கணேசன் அவர்களின் ரசிகர்களின் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒரு விஷயம்.

இது குறித்து ரசிகர்கள் என்னிடம் சொல்லி வருத்தப்பட்ட போது, நான் நடிகர் லால் அவர்களுக்கு போன் செய்து இந்தப் படத்தின் தலைப்பினை மாற்ற முடியுமா? என்று கேட்டேன்.

நான் அவர்களை வற்புறுத்தவில்லை உங்களால் முடிந்தால் உங்கள் மகன் ஜுனுக்கு இதில் விருப்பம் இருந்தால் தலைப்பை மாற்ற முயற்சி செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டேன்.

எனது கோரிக்கையை ஏற்று தற்போது இந்த படத்தின் தலைப்பை நடிகர் என்று மாற்றியதற்கு எனது நன்றிகள்” என்று தெரிவித்தார்.

இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. படத்தின் டைட்டில் மாற்றப்பட்டதை முன்னிட்டு இந்த படத்தின் புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. வரும் மே மாதம் 3 ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என்றும் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஈஷாவின் ‘தென்னிந்திய தென்னை திருவிழா’

பிப்ரவரி 16-ல் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்!

தமிழகத்தில் மூடப்படும் ரயில் நிலையம்: எது தெரியுமா?

வேலைவாய்ப்பு : சென்னை துறைமுகத்தில் பணி!

Tovino Thomas Nadikar Thilakam

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *