டொவினோ தாமஸா இது?: ரசிகர்கள் ஷாக்!

Published On:

| By christopher

Tovino Thomas Adrishya Jalakangal

மின்னல் முரளி, 2018 போன்ற வித்தியாசமான கதைகளைக் கொண்ட படங்களை தேர்வு செய்து அதிலும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தக் கூடியவர் மலையாள நடிகர் டொவினோ தாமஸ். மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழிலும் நடிகர் தனுஷுக்கு வில்லனாக மாரி 2 படத்தில் மிரட்டி இருப்பார்.

ஹீரோ, வில்லன் என்ற பாகுபாடெல்லாம் பார்க்காமல் கதையையும் கதாபாத்திரத்தையும் மட்டும் நம்பி நடிக்கக்கூடிய மிக சில இந்திய நடிகர்களில் டொவினோ தாமஸும் ஒருவர்.

இந்நிலையில் Veettilekkulla Vazhi, Perariyathavar போன்ற ஆகச் சிறந்த படங்களை இயக்கிய இயக்குனர் டாக்டர் பிஜு இயக்கத்தில் “அதிரிஷ்ய ஜலகங்கள்” என்ற ஓர் புதிய மலையாள படத்தில் டொவினோ தாமஸ் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்காக நடிகர் தாமஸ் உடல் எடையை குறைத்து ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு அந்த கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார்.

சமீபத்தில் அதிரிஷ்ய ஜலகங்கள் படத்தில் டொவினோ தாமஸின் கெட்டப் புகைப்படமாக வெளியானது. அந்த புகைப்படத்தை கண்டவுடன் யார் இவர் என நிச்சயமாக ஒரு நிமிடமாவது எல்லோருமே யோசிப்போம்.

அந்த அளவிற்கு முழு தோற்றத்தையும் மாற்றி வேறொரு ஆளாக உருமாறி இருக்கிறார் டொவினோ தாமஸ்.

மேலும் இந்த படம் குறித்த ஓர் சுவாரசியமான தகவலையும் டொவினோ தாமஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

அந்த பதிவில், “டாக்டர் பிஜுவின் அதிரிஷ்ய ஜலகங்கள் படம் நவம்பர் 3 முதல் 17 வரை எஸ்தோனியாவில் நடைபெறும் 27வது தாலின் பிளாக் நைட்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் (POFF) திரையிடப்பட உள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், இந்த படம் உலகெங்கிலும் உள்ள Elite A-பட்டியலுக்குள் கணக்கிடப்படும். இந்த மதிப்புமிக்க திரைப்பட விழாவில், போட்டிப் பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மலையாளத் திரைப்படம் இது. இயக்குனர் டாக்டர் பிஜு மற்றும் தயாரிப்பாளர் ராதிகா லவ்வுடன் இணைந்து நிகழ்வில் கலந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்த அற்புதமான திரைப்படத்தின் ஒரு பாகமாக இருந்த அனைவரையும் வாழ்த்துகிறேன். சிறந்ததை நம்புவோம்” என்று நடிகர் டொவினா தாமஸ் பதிவிட்டிருகிறார்.

கார்த்திக் ராஜா

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

100 ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் குரல் கொடுத்தார் : தமிழில் பேசிய பிரியங்கா 

திரைப்பட விழாவில் ரிலீசாகும் ஜோதிகாவின் ‘காதல் – The Core’!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel