“மாலிவுட்டில் மட்டும் தான் பெண்களுக்கு பிரச்சனையா?” – நடிகர் டொவினோ தாமஸ்

சினிமா

மலையாளத் திரைத்துறையில் மட்டுமே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற கருத்து தவறு என மலையாள நடிகர் டொவினோ தாமஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக மலையாள திரைத்துறையில் இருந்து பல்வேறு திடுக்கிடும் செய்திகள் வெளியாகி வருகின்றன. அனைத்திற்கும் முக்கிய காரணம் நீதிபதி ஹேமா கமிட்டி. தொடர்ந்து உச்ச நட்சத்திரங்கள் தொடர்ந்து பல்வேறு திரைப் பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இதுகுறித்து மலையாள நடிகர் டொவினோ தாமஸ் பேசுகையில், ” குற்றம் சாட்டப்பட்டவர் இந்த விவகாரத்தில் இருந்து விலகி இருப்பது பாரபட்சமற்ற விசாரணைக்கு உதவும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும். அது தான் உரிய நெறியாகும். அரசு நியமித்துள்ள விசாரணைக் குழு தேவைப்பட்டால் அறிக்கை வெளியிடும். தான் வேலை செய்யும் இடத்தில் அனைவரும் பாதுகாப்பாக உணர வேண்டும்.

பெண்கள் அனைத்து வேலைகளிலும் பாதுகாப்பற்ற சூழலை சந்தித்து வருகின்றனர். அனைத்தும் மாற வேண்டும். விசாரணை நடத்த தான் இங்கு சட்டங்களும், நீதிமன்றங்களும் இருக்கின்றன. நடிகைகளுக்கான பாலியல் தொல்லைகள் மலையாள திரைத்துறையில் மட்டுமே உள்ளது எனக் கூறுவது தவறு. இங்கு விசாரணை நடத்தப்பட்டதால் வெளியே தெரிகிறது. அனைத்து விதமான துறைகளிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் நடந்துகொண்டு தான் இருக்கிறது. அதுகுறித்து தகுந்த விசாரணை மேற்கொள்ள வேண்டும் ” எனப் பேசினார்.

டொவினோ தாமஸ் தற்போது ‘ அஜயண்டே ரண்டே மோஷனம் ‘ என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வருகிற ஓணம் பண்டிகை அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதில், ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டிரெய்லர் தேற்பொய்து வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

– ஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இன்சூரன்ஸ் பணத்துக்காக கணவர் இறந்து விட்டது போல நாடகம்… சிக்க வைத்த கழுத்து!

ஸ்டாலின் வெளிநாடு பயணம்… “துரைமுருகனுக்கு இடைக்கால முதல்வர் பதவி” – சீமான் டிமாண்ட்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0