குழந்தைகள் சொல்வதை, அவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தவிர்த்து விடாமல் காது கொடுத்து கேட்கவேண்டும், அவர்களின் பிரச்னையை தீர்க்க உறுதுணையாக நாம் நிற்க வேண்டும் என்கிற கருத்தை மையமாக வைத்து, விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆல்பம் பாடல் இன்று (பிப்ரவரி 9 ) வெளியாகியுள்ளது.
இந்த பாடலுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜா இப்பாடலை பாடியுள்ளார். இந்த பாடலை பா விஜய் எழுத, லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். மிகவும் எளிமையாக அனைவரது மனதை கவரும் விதத்திலும், உணர்வு பூர்வமாகவும், நெஞ்சை உருக வைக்கும் விதத்திலும் இந்த ஆல்பம் பாடல் அமைந்துள்ளது.
இந்த பாடலை தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சரும் , திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆல்பம் பாடல் தற்போது சமூக வலைதளங்களில் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
இதனிடையே பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகள் சொல்வதை இனியேனும் காது கொடுத்து கேட்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
இளமை திரும்புதே..காதலில் விழுந்த பில்கேட்ஸ்
குடிபோதையில் கல்வீச்சு தாக்குதல் : ஆயுதப்படை காவலர் மரணம்