இன்றைய ரிலீஸ் : 5 காதல் படங்கள்!

சினிமா

தீபாவளியை முன்னிட்டு வெளியான சர்தார், பிரின்ஸ், செப்டம்பர் 30 அன்று வெளியான பொன்னியின் செல்வன், அக்டோபர் 15 அன்று தமிழில் வெளியான கன்னட படமான காந்தாரா ஆகிய படங்கள் மட்டுமே திரையரங்குகளை ஆக்கிரமித்திருந்தன.

கடந்த இருவாரங்களாக குறிப்பிடும் படியான நேரடி தமிழ் படங்கள் வெளியாகவில்லை. இன்று ஐந்து நேரடி தமிழ் படங்களும், பன்மொழி படம் என அறிவிக்கப்பட்டுள்ள கன்னட படமான பனாரஸ் என ஆறு திரைப்படங்கள் தமிழ்நாட்டில் வெளியாகின்றன.

காதலை மையமாக கொண்டுஎழுதப்பட்ட திரைக்கதை கொண்ட படங்களே இன்று வெளியாகிறது.

1.காஃபி வித் காதல்

இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த ஆண்டு ‘அரண்மனை 3’ படம் வெளியானது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் இயக்கியுள்ள படம் காஃபி வித் காதல் குஷ்புவின் ‘அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட்’ மற்றும் ‘பென்ஸ் மீடியா நிறுவனங்கள்’ இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

மூன்று நாயகர்கள், மூன்று நாயகிகள் நடிக்கும் படமாக இது உருவாகியுள்ளது. இப்படத்தில் இவர்களுடன் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர் இசை:யுவன் சங்கர் ராஜா

2.லவ் டுடே

ஜெயம் ரவி நடித்த ‛கோமாளி’ திரைப்படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். அறிமுக இயக்குனரான இவர் அடுத்ததாக தானே ஹீரோவாக நடிக்கும் விதமாக ஒரு கதையை உருவாக்கி லவ் டுடே என்கிற பெயரில் அந்தப்படத்தை இயக்கியும் உள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் சினிமா இந்த படத்தை தயாரித்துள்ளது. சத்யராஜ், ராதிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தில் இவானா கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்தப்படத்தின் டிரைலர் வெளியானபோதே சமூக வலைத்தளத்தில் கடுமையான விமர்சனங்கள் பதிவானது

படத்தின் நாயகன் பிரதீப் பொதுவெளியில் பேசுவதற்கே கூசுகின்ற சில அநாகரிக வார்த்தைகளை பேசியிருந்ததை கண்கூடாக பார்க்க முடிந்தது. 

இந்த நிலையில் சமீபத்தில் தணிக்கை சான்றிதழ் வழங்க படத்தை பார்த்த தணிக்கை குழு 21 இடங்களில் மாற்றம் செய்ய சொல்லி படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது

3.நித்தம் ஒரு வானம்

 ரா.கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்துள்ள படம்”நித்தம் ஒரு வானம்’. இப்படத்தில் நடிகைகள் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர் இணைந்து நடித்திருக்கிறார்கள். விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு கோபி சுந்தர் மற்றும் தரண் குமார் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.

4.4554

முருகா படத்தின் மூலம் 2007 ஆம் ஆண்டு அறிமுகமான அசோக், நாயகனாக நடித்திருக்கும் படம் 4554. இந்தப் படத்தை கர்ணன் மாரியப்பன் இயக்குகிறார். இயக்குநர் தனது மன்னன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு, ரஷாந்த் அர்வின் இசையமைக்க, வினோத் காந்தி ஒளிபதிவு செய்துளார். 

5. கண்டேன் உன்னை தந்தேன்

தங்கவேலு கண்ணன் இயக்கி, வசனம் எழுதி, தயாரித்து  நடித்துள்ள  படம் கண்டேன் உன்னை தந்தேன் என்னை. இப்படத்தில் நாயகனாக அரவிந்த்  நாயகியாக அம்சரேகா  நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து, மேகா ஸ்ரீ , கோவை சேகர், ஜாகிர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

6. பனாரஸ்

சமீப காலமாக இந்து மதத்தை முன்னிறுத்தும் வகையில் இந்தியாவில் படங்கள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது காதல் படம் என்று பனாரஸ் படத்தை கூறினாலும் படம் பார்ப்பவர்களுக்கு காசி, அந்த நகரத்தை பற்றிய செய்திகளை கொண்டு செல்லும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. கன்னடத்தில் பியூட்டிபுல், மனசு குலு, பெல்பாட்டம் ஆகிய படங்களை இயக்கிய ஜெயதீர்த்தா இயக்கியுள்ள பனாரஸ் படத்திற்கு குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்ய அஜனீஸ் லோக்நாத் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் ஜையித் கான் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக சோனல் மாண்டீரோ நடித்துள்ளார். 

படமாகும் இந்தியாவின் முதல் பெண் உளவாளியின் கதை!

”ரஞ்சிதமே கொஞ்சணுமே” வெளியான விஜய் பட முதல் பாடல் புரோமோ!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *