டைட்டானிக் படத்தில் நடிப்பதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த நடிகர் டிகாப்ரியோவை தான் தாக்கியதாக இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.
1997ம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களால் இன்றுவரை கொண்டாடப்பட்டு வரும் திரைப்படம் டைட்டானிக்.
மிக பிரம்மாண்டமான டைட்டானிக் கப்பல் மூழ்கியதுடன், ஜாக் – ரோஸின் மூழ்காத காதலையும் சொல்லி ரசிகர்களை தன்வசம் இழுத்தார் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்.
ஹாலிவுட்டின் முன்னணி நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவுக்கும், நடிகை கேட் வின்ஸ்லெட்டுக்கும் அவர்களது வாழ்வில் மறக்கமுடியாத வெற்றியை டைட்டானிக் பெற்று தந்தது.
படப்பிடிப்பு துவங்கி திரைக்கு வருவதற்கு சுமார் இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொண்ட டைட்டானிக் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. 11ஆஸ்கர் அகாடமி விருதுகளை வென்ற இத்திரைப்படம், உலகளவில் அதுவரை இல்லாத அளவுக்கு 1.8பில்லியன் அமெரிக்க டாலர் ஈட்டி வசூல் வரலாற்றில் சாதனை படைத்தது.
2009ம்ஆண்டு அதே ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த அவதார் படம் வரும்வரை 12வருடங்களாக உலகளவில் அதிகபட்ச வசூல் செய்த படமாக டைட்டானிக் இருந்தது.

டிகாப்ரியோ கையை திருக்கினேன்
இந்நிலையில் “டைட்டானிக் திரைப்படம் வெளியாகி 25வதுஆண்டை கடந்துள்ளது. இதனை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் ஒரு சுவாரசியமான சம்பவத்தை பகிர்ந்து கொண்டார்.
கேமரூன் முதலில் லியோனார்டோ டிகாப்ரியோவிடம் ’டைட்டானிக்’ கதையை கூறிய போது அவர் அதனை ’சலிப்பான கதை’ என்றும், காதல் கைகூடாத படத்தில் தான் நடிக்க விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கேமரூன், டிகாப்ரியோவின் கையை திருகி, கதையின் ஆழத்தையும், அது அடையப்போகும் வெற்றியையும் உறுதியுடன் கூறியுள்ளார். இறுதியில் டைட்டானிக்கில் நடிப்பது ‘கடினமான சவால்’ என்று புரிந்தபின் படத்தில் நடித்துள்ளார் டிகாப்ரியோ.
இந்நிலையில் டைட்டானிக் திரைப்படம் 4K மறுசீரமைப்புடன் வரும் பிப்ரவரி 10ம்தேதி உலகம் முழுவதும் மீண்டும் திரையரங்கில் வெளியாக உள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் பாரமவுண்ட் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
‘துணிவு’ வெற்றி : சபரிமலையில் இயக்குநர் வினோத்
சென்னை சங்கமம் : நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிதியுதவி உயர்வு – முதல்வர்