‘கங்குவா’ நெகட்டிவ் ரிவ்யூ… யூடியூபர்களுக்கு தடை… திருப்பூர் சுப்பிரமணியம் ஆதங்கம்!

Published On:

| By Selvam

கடந்த நவம்பர் 14-ஆம் தேதி சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்திற்கு இணையத்தில் அதிகப்படியான நெகட்டிவ் ரிவ்யூஸ் வந்தது.

இந்தநிலையில், திரைப்படங்களுக்கு நெகட்டிவ் ரிவ்யூஸ் கொடுக்கும் யூடியூபர்களை திரையரங்க வளாகத்திற்குள் அனுமதிக்க கூடாது என்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆடியோவில், “சமீப காலமாக தமிழகத்தில் காலை 9 மணிக்கு தான் சிறப்பு காட்சிகள் திரையிடப்படுகிறது. ஆனால், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் காலை 4 மணிக்கெல்லாம் முதல் நாள் காட்சிகள் திரையிடப்படுகிறது. இந்தியா முழுவதும் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிட வேண்டும்.

நெகட்டிவ் ரிவ்யூ போட்டால் தான் மக்கள் பார்க்கிறார்கள் என்று ஏராளமான யூடியூப் சேனல்களில் தற்போது நெகட்டிவ் ரிவ்யூ கொடுக்கிறார்கள். நான் 44 ஆண்டுகளாக டிஸ்டிரிபியூஷன் ஃபீல்டில் இருக்கிறேன். எனக்கு பாலச்சந்தர் இயக்கிய வானமே எல்லை படம் பார்த்தபோது பிடிக்கவில்லை. ஆனால், அப்படம் 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. 100-வது நாள் விழாவை நான் தான் ஈரோட்டில் நடத்தினேன். சேது, ஒருதலை ராகம், அன்னக்கிளி, 16 வயதினிலே என இந்த மாதிரி என்னால் 100 படங்களை சொல்ல முடியும்.

ஆனால், தற்போது வெளியாகியுள்ள கங்குவா படத்தை காலையில் பார்த்துவிட்டு காதில் ரத்தம் வருகிறது என மிக மோசமாக விமர்சிக்கிறார்கள். இந்தியன் 2, வேட்டையன், கங்குவா போன்ற படங்கள் வசூல் குறைந்ததற்கு காரணம் விமர்சகர்கள் தான். தியேட்டர் வளாகத்திற்குள் சென்று செட்டப் செய்து மிகவும் கீழ்த்தரமாக விமர்சனங்கள் எடுக்கிறார்கள்.

திரையரங்க வளாகத்திற்குள் யூடியூபர்களை அனுமதிக்க கூடாது என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஏற்கனவே ஆலோசித்திருக்கிறோம். அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். கேரளாவில் ஒரு தயாரிப்பாளர் தன்னுடைய படத்திற்கு முதல் இரண்டு வாரங்கள் எந்த ஒரு விமர்சனமும் பொதுவெளியில் வரக்கூடாது என்று நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கியிருக்கிறார். இதேபோல, தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்க வேண்டும். இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் முடிவெடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

1,000-வது நாளை எட்டும் ரஷ்யா – உக்ரைன் போர்: எச்சரிக்கும் யுனிசெஃப்!

டாப் 10 நியூஸ்: சுற்றுலா விருது வழங்கும் நிகழ்ச்சி முதல் 10 மாவட்டங்களில் கனமழை வரை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment