Tirupur Subramani resigns why

திருப்பூர் சுப்பிரமணியம் ராஜினாமா-பின்னணி என்ன?

தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் சொந்த காரணங்களுக்காக சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதாக சங்க செயலாளருக்கு கடிதம் அனுப்பினார். Tirupur Subramani resigns why

அதோடு, திருப்பூரில் பத்திரிகையாளர்கள் கூட்டம் நடத்தி அக்கூட்டத்தில் நான் ஏன் ராஜினாமா செய்கிறேன் என்பதற்கான காரணத்தையும் கூறி இருக்கிறார்.

“எனது நிர்வாகத்தில் உள்ள திரையரங்கில் அரசின் விதிமுறையை சரியாக புரிந்துகொள்ளாமல் படங்களை திரையிடுவதற்கான நேரம் ஒதுக்கீடு செய்வதில், அதனை நிர்வாகம் செய்பவர்கள் டைகர்- 3 படத்தை காலை 7 மணி காட்சி திரையிட்டு தவறு செய்துவிட்டார்கள். அதற்கு தார்மீக பொறுப்பேற்கிறேன்.

அதனால் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து முன்னுதாரணமாக இருக்க விரும்புகிறேன். பொறுப்பில் இருப்பவர்கள் இது போன்ற தவறுகளை செய்யக் கூடாது, ஆதரவு அளிக்கவும் கூடாது” என  தெரிவித்தார்.

அவரிடம் மின்னம்பலம் சார்பில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் கூறியதை உறுதிப்படுத்தினார்.

தமிழ் சினிமாவில் விநியோகஸ்தர், திரையரங்க உரிமையாளர், திரைப்பட தயாரிப்பில் பங்கேற்பாளர், பைனான்சியர் என பன்முகம் கொண்டவர் திருப்பூர் சுப்பிரமணியம்.  திரையரங்கு, விநியோகஸ்தர் சங்கங்கள்,தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஆகியவற்றில் பல்வேறு பதவிகளில் இருந்தவர்.

ரஜினிகாந்த் முதல், தற்போது விஜய் வரை இவரது விமர்சனங்களுக்கு தப்பியவர்கள் எவரும் இல்லை. கதாநாயகர்களுக்கு சம்பளம் கூடுதலாக கொடுப்பதால் தயாரிப்பு செலவு அதிகரிக்கிறது. அதனால் படத்தின் விநியோக உரிமை விலை அதிகமாகிறது. இதன் காரணமாக அதிக விலைக்கு டிக்கெட் விற்க வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர் என வெளிப்படையாக தனது கருத்தை வலிமையாக பதிவு செய்தவர் திருப்பூர் சுப்ரமணியம்.

அப்படிப்பட்டவர் சாதாரண விஷயத்திற்காக ராஜினாமா செய்வாரா என்கிற கேள்விகளுடன் திரைப்பட வட்டாரத்திலும், திரையரங்க உரிமையாளர்கள் மத்தியிலும்  விசாரித்தோம். Tirupur Subramani resigns why

“திருப்பூர் சுப்பிரமணியம் ராஜினாமா என்பது திரையரங்க உரிமையாளர்களுக்கு பின்னடைவு. அவரது ராஜினாமாவுக்கு காரணம் அவரது குடும்ப நெருக்கடி தான். டைகர்- 3 படத்தின் சிறப்பு காட்சி அனுமதியில்லாமல் திரையிடப்பட்டதின் காரணமாக சினிமா சட்டப்படி 1000ம் ரூபாய் அபராதம் மட்டுமே விதிக்க முடியும். வேறு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. இது திரையரங்க தொழிலில் சகஜமானதுதான் இதற்காக ராஜினாமா என்பது தேவையற்றது என சக நிர்வாகிகள் தரப்பில் சுப்பிரமணியத்திடம் பேசி வருகிறோம்.

தமிழ் சினிமாவில் தயாரிப்பு, வியாபாரம், விநியோகம், திரையரங்கு என எல்லாவற்றிலும் பிரச்சினை, பஞ்சாயத்துகள் ஏற்படும்போது அதனை சுமுகமாக முடித்து தீர்வை எட்டுவதற்கு திருப்பூர் சுப்பிரமணியத்தைத்தான் கூப்பிடுங்கள் என்பார்கள் மூத்த தயாரிப்பாளர்கள்.

தற்போதைய சூழலில் திருப்பூர் சுப்பிரமணியம் போன்றவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவை. அவரே கூறியதுபோன்று தவறுகளும், குறைகளும் அவரிடம் உண்டு. ஆனால் அவரிடம் இருக்கும் அதிகபட்ச நல்ல செயல்பாடுகளை மட்டுமே திரையரங்க உரிமையாளர்கள் பார்க்கிறோம். அவரது உடல் நலன் முக்கியம் என்கிற குடும்பத்தினர் அழுத்தமே தலைவர் பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்ய காரணம்.  ஆனாலும் ராஜினாமா முடிவில் இருந்து வாபஸ் பெற அவரை சம்மதிக்கவைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்” என்றும் கூறுகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இராமானுஜம்

செந்தில் பாலாஜி உடல்நிலை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

மத்திய ஆட்சியாளர்களால் அரசியலமைப்பு சட்டத்திற்கு ஆபத்து: ஸ்டாலின்

விவசாயிகள் மீது குண்டாஸ்: பாஜக ஆர்ப்பாட்டம்!

உலக கோப்பையை வெல்வது எப்படி?: இந்திய அணிக்கு சத்குரு டிப்ஸ்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts