டிக் டாக் பிரபலம் டான்சர் ரமேஷ் குடியிருப்பு பகுதியின் 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிக்டாக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மைக்கேல் ஜாக்சன் ஸ்டைலில் நடனமாடி பிரபலமானவர் டான்சர் ரமேஷ். சமூகவலைத்தளங்களில் மட்டுமல்லாது, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
சென்னை மூர் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த டான்சர் ரமேஷ்க்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள கே.பி. பார்க் அரசு குடியிருப்பு பகுதியில் இவரது முதல் மனைவியும், மூர் மார்க்கெட் பகுதியில் இவரது இரண்டாவது மனைவியும் வசித்து வருகின்றனர். இரண்டு வீடுகளிலும் மாறி மாறி டான்சர் ரமேஷ் வசித்து வந்தார்.
இந்நிலையில், டான்சர் ரமேஷ் தன்னுடைய பிறந்தநாளான இன்று (ஜனவரி 27) குடியிருப்பு பகுதியின் 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. டான்சர் ரமேஷின் தற்கொலை சம்பவம் தொடர்பாக பேசின் பிரிட்ஜ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் கணவன் – மனைவி இடையேயான பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
டான்சர் ரமேஷ் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் நடனமாடியிருந்தார். தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள ஜெயிலர் படத்திலும் நடனமாடியுள்ளார்.
அவர் தற்கொலை செய்து கொண்டுள்ள செய்தி அறிந்து அவருடன் பணியாற்றிய பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மோனிஷா
”முதல் பந்திலேயே அவுட்!” : மதுரை மாணவியின் கேள்வியை பாராட்டிய பிரதமர்
காங்கிரஸுடன் இணைகிறதா மக்கள் நீதி மய்யம்?