தெலுங்கு சினிமா ரசிகர்களால் ‘மாஸ் மகாராஜா’ என கொண்டாடப்பட்டு வரும் கதாநாயகன் ரவி தேஜா.
வம்சி இயக்கத்தில், ரவி தேஜா நாயகனாக நடித்து வரும் திரைப்படம் ‘டைகர் நாகேஸ்வரராவ்’. இந்தத் திரைப்படத்தை அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் எனும் பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளரான அபிஷேக் அகர்வால் தயாரிக்கிறார்.
இவரின் இலட்சிய படைப்பான ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோசன் போஸ்டர் மே 24ஆம் தேதி அன்று வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள்.
முதன்மையான கதாபாத்திரத்தில் இதுவரை கண்டிராத முரட்டுத்தனமான தோற்றத்தில் ‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா தோன்றுகிறார். டைகர் நாகேஸ்வரராவ் 1970களில் ஸ்டூவர்ட் புரம் எனும் கிராமத்தின் பின்னணியில் வாழ்ந்த பிரபல திருடனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகிறது.
இதில் கதையின் நாயகனாக நடிக்கும் ரவி தேஜாவின் உடல் மொழி, வசன உச்சரிப்பு மற்றும் தோற்றப்பொலிவு ஆகியவை முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்.
மேலும் ‘மாஸ் மகாராஜா’ ரவிதேஜா இதற்கு முன் எப்போதும் ஏற்று நடித்திராத கதாபாத்திரமாக இருக்கும்.
இப்படத்தில் ரவி தேஜாவிற்கு ஜோடிகளாக நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஆர். மதி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.
மயங்க் சிங்கானியா இணை தயாரிப்பாளராகவும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்கள்.
ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுதி இருக்கும் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ திரைப்படம் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு அக்டோபர் 20ஆம் தேதியன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது.
செல்வம்
பிச்சைக்காரன் 2’ ஸ்னீக் பீக் வெளியானது!
கர்நாடகா அடுத்த முதல்வர் யார்?: ராகுல் – கார்கே ஆலோசனை!