சல்மான் – ஷாருக் – ரித்திக் இணைந்து நடிக்கும் “டைகர் 3”!

சினிமா

கோலிவுட் ரசிகர்கள் லோகேஷ் கனகராஜின் எல்.சி.யு (லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ்) படங்களுக்காக எந்த அளவிற்கு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்களோ.. அதேபோல யஷ் ராஜ் ஃபிலிம்ஸின்  ‘ஸ்பை யுனிவர்ஸ்; படங்களுக்கு பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

2012 ஆம் ஆண்டு சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடிப்பில் வெளியான “Ek Tha Tiger” திரைப்படம் தான் ஒய்.ஆர்.எஃப் ஸ்பை யுனிவர்ஸ்- இன் முதல் படம்.

அதன்பிறகு 2017 ஆம் ஆண்டு டைகர் படத்தின் இரண்டாம் பாகமாக வெளியான “Tiger Zinda Hai”  திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தவுடன் ஸ்பை யுனிவர்ஸ்  திட்டத்தை தொடர முடிவு செய்து யஷ் ராஜ் ஃபில்ம்ஸ் நிறுவனம் ரித்திக் ரோஷனின் “வார்”, ஷாருக்கானின் “பத்தான்” திரைப்படங்களை ஸ்பை யுனிவர்ஸ் வரிசையில் வெளியிட்டது. அந்த இரு படங்களும் மெகா ஹிட் ஆக, ஸ்பை யுனிவர்ஸ்-இன் அடுத்த படம் எப்போது வெளியாகும் என்று பாலிவுட் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருகின்றனர்.

தற்போது ஸ்பை யுனிவர்ஸ்- இன் அடுத்த படமான சல்மான் கானின் “டைகர் 3” படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மனிஷ் ஷர்மா இயக்கியுள்ள இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ, டிரெய்லர்கள், பாடல் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருக்கிறது.

ஷாருக்கானின் “பதான்” படத்தில் சல்மான் கான் “டைகர்” கதாபாத்திரத்தில் ஒரு சின்ன கேமியோ கொடுத்திருப்பார். அதேபோல் “டைகர் 3” படத்தில் “பத்தான்” கதாபாத்திரத்தில் ஷாருக்கான் கேமியோ கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“வார்” படத்தில் கபீர் என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரித்திக் ரோஷன் டைகர் 3 படத்தில் கேமியோ பாத்திரத்தில் நடித்துள்ளார் என தகவல் வெளியாகி இருக்கிறது. பாலிவுட்டின் டாப் ஹீரோக்கள் ஒரே படத்தில் இணைந்து நடிப்பது ரசிகர்கள் மத்தியில் டைகர் 3 படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த படம் வரும் நவம்பர் 12 ஆம் தேதி வெளியாகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

குமரி – சென்னை வரை பயணிக்கும் கலைஞரின் ‘முத்தமிழ்த் தேர்’!

“பெரியார்தான் அடித்தளம்”: கி.வீரமணிக்கு சோனியா காந்தி கடிதம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *