துப்பாக்கி படத்தில் நீக்கப்பட்ட நடிகர் விஜய்யின் வாழைப்பழ காமெடி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
துப்பாக்கி ரீ-ரிலீஸ்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான படம் “துப்பாக்கி”. இதில் ராணுவ வீரராக விஜய் நடித்திருப்பார். விடுமுறைக்காக ஊருக்கு திரும்பும் ராணுவ வீரரான விஜய், மும்பை நகருக்குள் ஸ்லீப்பர் செல்லாக இருக்கும் தீவிரவாதிகளை எதிர்த்து அழிப்பது தான் படத்தின் கதையம்சமாகும்.
இந்த படத்தில் விஜய், காஜல் அகர்வால், சத்யன், ஜெய்ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வெளியானபோது வசூல் ரீதியாகவும், விமர்சனங்கள் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், துப்பாக்கி படத்தை ரீரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். முன்னதாக, நடிகர் விஜய் நடித்த கில்லி படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, ஜூன் 22 நடிகர் விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி அவர் நடித்த துப்பாக்கி, போக்கிரி படங்கள் ஜூன் 21ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளன.
விஜயின் வாழைப்பழ காமெடி வீடியோ
இந்நிலையில், துப்பாக்கி படத்தில் நீக்கப்பட்ட காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.
1989ஆம் ஆண்டு வெளியான கரகாட்டகாரன் படத்தில் கவுண்டமணி-செந்தில் நடிப்பில் வெளியான வாழைப்பழ காமெடி காட்சி தற்போது வரை டிரெண்டிங்கில் உள்ளது. அதில் கவுண்டமணி ஒரு ரூபாய்க்கு 2 வாழைப்பழங்களை வாங்கி வருமாறு செந்திலிடம் சொல்லுவார்.
செந்திலும் கடைக்கு சென்று 2 வாழைப்பழங்களை வாங்கிவிட்டு ஒன்றை அங்கேயே சாப்பிட்டு விட்டு, மற்றொன்றை கவுண்டமணியிடம் கொடுப்பார். அப்போது கவுண்டமணி, “ஒரு பழம் இங்க இருக்கு.. இன்னொன்னு எங்க?” என்று கேள்வி கேட்பார். அதற்கு செந்தில், “அதுதாண்ணே இது” என்று பதிலளிப்பார். அந்த காமெடி காட்சிக்கு சிரிக்காத ஆட்களே இருக்க முடியாது.
துப்பாக்கி படத்தின் நீக்கப்பட்ட காட்சியில், மும்பையில் தனது நண்பன் வேலை பார்க்கும் காவல் நிலையத்தில் உள்ளவர்களுக்கு ஹிந்தியில் இந்த வாழைப்பழ காமெடியை மிமிக்கிரி செய்து சிரிக்க வைக்கிறார் விஜய்.
இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலான நிலையில், துப்பாக்கி படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இதனை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
’ஈபிஎஸ் 5 நிமிடம் யோசித்தால் அதிமுகவிற்கு விடிவுகாலம்’ – புகழேந்தி பேட்டி!
மூன்றாவது முறையாக பிரதமர்… மோடி போட்ட முதல் கையெழுத்து என்ன?