அஜித் நடிக்கும் ‘துணிவு’ படத்தின் இரண்டாவது பாடலான ‘காசேதான் கடவுளடா’ வெளியாகியுள்ளது.
ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் துணிவு படத்தில் நடித்திருக்கிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக அஜித், ஹெச். வினோத், போனி கபூர் கூட்டணி இணைந்துள்ளது.
மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 2023 பொங்கலுக்கு வெளியாக உள்ள இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். துணிவு படத்தின் முதல் பாடலான சில்லா சில்லா வெளியாகி ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 18) இரண்டாவது பாடலும் வெளியாகியுள்ளது.
பாடலாசிரியர் வைசாக் எழுதிப் பாடிய இந்த பாடலை நடிகை மஞ்சு வாரியரும் இணைந்து பாடியுள்ளார். “காசே தான் கடவுளடா அந்த கடவுளுக்கும் அது தெரியுமடா” என்று பாடல் தொடங்குகிறது.
“ஸ்விஸூல இருக்கு காந்திக்கும் கணக்கு, ஏகப்பட்ட ஈஎம்ஐ-ல நாடே கெடக்கு, மனுஷன மிருகமா மாத்திடும் மணி, உஷாரா இல்லன்னா தலையில துணி, பொறக்குற நொடியில வெரட்டுது காசு” போன்ற வரிகள் ஈர்க்கும் வகையிலும், பணத்தின் தேவையை உணர்த்தும் வகையிலும் அமைந்திருக்கிறது.
தற்போது வெளியாகியுள்ள துணிவு படத்தின் 2வது பாடலை அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
மோனிஷா
டிசம்பர் 21, 22 தேதிகளில் கனமழை!
அண்ணாமலையின் சாம்பார் கணக்கு: வாட்சை விடாத செந்தில் பாலாஜி