ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு திரைப்படம் இன்று (ஜனவரி 11) உலகம் முழுவதும் வெளியானது.
வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. அஜித் இப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் சிறப்பு காட்சிகள் இன்று அதிகாலை 1 மணிக்கு வெளியானது.
தமிழகம் முழுவதும் நேற்று மாலை முதல் அஜித் ரசிகர்கள் திரையரங்குகளின் முன்பு பேனர் வைத்தும், பட்டாசு வெடித்தும் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர்.
இந்தநிலையில், ட்விட்டரில் ரசிகர்கள் துணிவு படம் குறித்து பதிவிட்டு வருகின்றனர்.
யுவா என்ற நபர் தனது டிவிட்டர் பக்கத்தில், “துணிவு படத்தில் நடிகர் அஜித்தின் காட்சிகள் சிறப்பாக உள்ளது. துணை நடிகர்கள் நன்றாக நடித்துள்ளனர். இப்படம் ரசிகர்களை ஏமாற்றமடைய செய்யவில்லை. அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பும்படி துணிவு திரைப்படம் உள்ளது. கண்டிப்பாக அனைவரும் படத்தை பார்க்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
சையஸ் அருள்ராஜ், துணிவு படத்தில் இயக்குநர் வினோத் வர்க்க அரசியல் குறித்து பேசியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
அஞ்சன் ராக்கி, துணிவு படத்தின் முதல் பாதி அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக உள்ளதாகவும், அஜித் நன்றாக நடித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
காரி என்ற நபர் பல ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் அஜித் தனது ரசிகர்களுக்கு வெற்றி படம் கொடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
சாய் சுராஜ், “படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. அஜித் தனது நடிப்பால் படம் முழுவதையும் தன் வசப்படுத்துகிறார். படத்தின் முதல் காட்சி நீங்கள் செலவிடும் டிக்கெட்டின் விலைக்கு போதுமானதாக உள்ளது. அஜித் குமாரின் ஆக்ஷன் காட்சிகளுக்கு ஜிப்ரானின் இசை வலுசேர்க்கிறது.” என்றுள்ளார்.
செல்வம்
ஆர்.ஆர்.ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு கோல்டன் குளோப் விருது
திரை பிரபலங்களின் வாழ்த்து மழையில் துணிவு வாரிசு