அஜித் நடிக்கும் துணிவு படத்தின் மூன்றாவது பாடலான கேங்ஸ்டா வெளியாகியுள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் துணிவு படம் உருவாகியுள்ளது. இந்த படம் வங்கிக்கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்டுள்ளதால் நடிகர் அஜித்தின் புதிய தோற்றத்தைக் காண்பதற்கு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இப்படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள இந்த படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது.
“சில்லா சில்லா, காசேதான் கடவுளடா” பாடல்களைத் தொடர்ந்து “கேங்ஸ்டா” பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை ஜிப்ரான் மற்றும் பாடகர் ஷபீர் சுல்தான் இணைந்து பாடியுள்ளனர்.
‘நோ கட்ஸ் நோ க்ளோரி’ என்ற வசனத்துடன் தொடங்கும் இந்த பாடல் எதிரிகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது. “நம்பிக்கை இழக்காமல் போர் தொடுப்பவன், கடைசி நிமிடம் வரை கர்மா கொடுப்பவன், துணிந்தால் வெற்றி நமதே” போன்ற வரிகள் பாடலில் கவனம் பெறுகின்றன.
கேங்ஸ்டா பாடலை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். துணிவு படப்பிடிப்பு நிறைவுபெற்று படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
மோனிஷா
டெஸ்ட் சாம்பியன்ஷிப் : இறுதிப்போட்டி வாய்ப்பில் தடம்பதித்த இந்தியா
தேனாண்டாள் பிலிம்ஸுக்கு உதவும் லைகா நிறுவனம்!