நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் கதாபாத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் துணிவு படம் உருவாகியுள்ளது. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து இயக்குநர் எச். வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் நடிகர் அஜித் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது.
இப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர், இயக்குநர் சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமத்தை உதயநிதியின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில், “சில்லா சில்லா, காசேதான் கடவுளடா, கேங்ஸ்டா” ஆகிய மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
தொடர்ந்து இன்று (டிசம்பர் 30) துணிவு படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பைக் கண்ட ரசிகர்கள் இது 4வது பாடலுக்கான அப்டேட்டாக இருக்கும் என்றுதான் நினைத்தார்கள்.
ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் தாண்டி, துணிவு படத்தின் கதாபாத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
முதல் கதாபாத்திரமாகப் பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரத்தின் கதாபாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. துணிவு படத்தில் அவர் மைபா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
தொடர்ந்து, நடிகர் பிரேம் துணிவு படத்தில், பிரேம் கதாபாத்திரத்திலேயே நடிக்கிறார். ஜான் கொக்கன் ‘கிரிஷ்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
வீரா ‘ராதா’ கதாபாத்திரத்திலும், ஜி.எம். சுந்தர் ‘முத்தழகன்’ கதாபாத்திரத்திலும், அஜய் ராமச்சந்திரன் கதாபாத்திரத்திலும், சமுத்திரக்கனி ‘தயாளன்’ கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மஞ்சு வாரியர் மற்றும் அஜித் நடிக்கும் கதாபாத்திரங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோனிஷா
பெற்றோரிடமே கடத்தல் நாடகம்: போலீசிடம் சிக்கிய இளம்பெண்!
குழந்தையை பார்க்காவிட்டாலும் ஜீவனாம்சம்: உயர் நீதிமன்றம் உத்தரவு!