விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படம் ஜனவரி 11-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழு தரப்பில் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் வாரிசு திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பிலிருந்தனர்.
சமீபத்தில் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்து.
வாரிசு திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது. ட்ரைலர் வெளியாகி 15 மணி நேரங்களில் 19 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.
இந்தநிலையில் வாரிசு திரைப்படம் ஜனவரி 11-ஆம் தேதி வெளியாகும் என்று ஸ்ரீ வெங்கடேஷ்வரா தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக துணிவு திரைப்படம் ஜனவரி 11-ஆம் தேதி வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் நேற்று மாலை அறிவித்திருந்தார். துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாவதால் தல, தளபதி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
முன்னதாக கடந்த 2014-ஆம் ஆண்டு விஜய் நடித்த ஜில்லா திரைப்படமும், அஜித் நடித்த வீரம் திரைப்படமும் ஒரே நாளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
செல்வம்