thug life release date

விண்வெளி நாயகா… ‘THUG LIFE’ படத்தின் ரிலீஸ் தேதி தெரியுமா?

மணிரத்னமும் கமல்ஹாஸனும் 37 ஆண்டுகள் கழித்து இணைந்து உருவாக்கியிருக்கும் படம் “Thug Life”. படத்தின் கதையைக் கமல் ஹாஸனும் மணிரத்னமும் எழுதியிருக்கிறார்கள். படத்தைக் கமல்ஹாஸனின்  ‘ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ மற்றும்  உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ இணைந்து தயாரித்துள்ளது.

சிலம்பரசன், திரிஷா, அஷோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், அபிராமி, நாசர், ஆகியோர் நடித்திருக்கும் இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்துள்ளார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, அன்பறிவு சகோதரர்கள் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்கள்.

இந்த படத்தின் டைட்டில் டீஸர் சென்ற வருடம் நவம்பர் 6ஆம் தேதி வெளியானது. இதில் சாமுராய் உடையில் வரும் கமல் ஹாஸன், தனது கதாபாத்திரத்தின் பெயர் ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்று அறிவித்திருப்பார்.

இந்த நிலையில் கமல் ஹாஸனின் 70வது பிறந்த நாளான இன்று(நவம்பர் 7) ‘Thug Life’ படம் 2025 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி வெளியாகும் என்று டீசர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

சண்டைக் காட்சிகளால் நிறைந்திருக்கும் இந்த டீஸரில் வெவ்வேறு கெட்டப்களில் கமல் ஹாஸன் தோன்றுகிறார். அது மட்டுமில்லாமல் சிலம்பரசனும் அதிரடியான சண்டைக் காட்சி ஒன்றில் தோன்றுகிறார்.

பல ஆண்டுகள் கழித்து கமலும் மணி ரத்னமும் இணைவதால், இருவரது ரசிகர்களும் இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

நீங்கள் இருவரும் இந்துக்கள், குழந்தைக்கு இப்படி பெயர் வைக்கலாமா? தீபிகா மீது பாய்ந்த நெட்டிசன்கள்

அதிபராகும் டொனால்ட் டிரம்ப்… சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

யாரும் எதிர்பாராத வீழ்ச்சி… தங்கம் விலையால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts