இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ வருகிற நவ.7ஆம் தேதி கமல்ஹாசனின் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு காலை 11.00 மணிக்கு வெளியாகும் என அப்படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்படக்குழு சமூக வலைதளத்தில் பதிவிட்ட பதிவில், ‘வாட்ச் அவுட் ஃபார் தி தக்ஸ்’ என்கிற கேப்ஷன் இடம்பெற்றுள்ளது.
இந்தப் படத்தில் சிலம்பரசன், திரிஷா, நாசர், ஜோஜு ஜார்ஜ், அலி ஃபாசல், ஐஸ்வர்யா லக்ஷ்மி, அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், ‘நாயகன்’ திரைப்படத்திற்குப் பிறகு 36 ஆண்டுகளுக்கு பின்னர் மணிரத்னமும் கமல்ஹாசனும் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் இணைந்து வேலை செய்துள்ளனர். இந்த திரைப்படமும் ஒரு கேங்ஸ்டர் குழுவைச் சுற்றிய கதைக்களத்தைக் கொண்ட ஒரு ஆக்ஷன் திரைப்படம் என்பது ஏற்கனவே வெளியான அப்டேட்கள் மூலம் தெரியவந்தது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு வேலைகளை மேற்கொள்ள உள்ளார். இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இந்தப் படத்தின் டைட்டில் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், கமல்ஹாசனின் நடிப்பில் ’இந்தியன் – 3’ திரைப்படம் அடுத்து வெளியாகத் தயாராகி வருகிறது.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
இன்ஸ்டாவில் ஐஸ்வர்யாராய் பின்தொடரும் ஒரே நபர்… யார் தெரியுமா?