நாயகன் படத்திற்கு பின் இயக்குநர் மணிரத்னம், நடிகர் கமல் ஹாசன் கூட்டணியில் மிக பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் படம் தக் லைஃப்.
இந்த படத்தில் சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, அபிராமி, நாசர் உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் ஒரு கேங்ஸ்டர் ஆக்சன் கதைக்களத்தில் தக் லைஃப் படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தின் போஸ்டர் மற்றும் கமல் மற்றும் சிம்பு ஆகிய இருவரின் அறிமுக வீடியோக்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் தக் லைஃப் படத்திற்கான படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்ற போது, படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.
தற்போது டெல்லி படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், அடுத்ததாக தக் லைஃப் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சென்னையில் 17 நாட்கள் ஷூட்டிங் நடக்க உள்ளதாகவும், இந்த ஷூட்டிங்கில் கமல் ஹாசன், சிம்பு, அசோக் செல்வன் மற்றும் திரிஷா ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தக் லைஃப் படத்தில் நடிகர் கமலின் மகன் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார். இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தக் லைஃப் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளோடு மணிரத்னம் மிக வேகமாக படத்தை எடுத்து வருகிறார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…