‘3 விநாடி வீடியோ நீக்கியே ஆக வேண்டும் ‘- நயனை விரட்டும் தனுஷ்

Published On:

| By Kumaresan M

நயன்தாரா மற்றும் தனுஷ் மோதல்  விவகாரம் தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாபிக். நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ள  தனது திருமண  ஆவணப்படத்திற்கு நானும் ரௌடி தான் படத்தின் பாடலை பயன்படுத்த நயன்தாரா அனுமதி கேட்டு அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அந்த  3 வினாடிகள் கொண்ட  நானும் ரெளடி தான் பட காட்சிகளை நயன்தாரா பயன்படுத்தியுள்ளார். இதற்காக,  ரூ.10 கோடி கேட்டு படத் தயாரிப்பாளரான  தனுஷ் நோட்டீஸ் அனுப்பினார். இதையடுத்து, வாழு வாழ விடு என்கிற தலைப்பில் நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோர் அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.

ஆனால், அறிக்கைக்கு பிறகும் தனுஷ் அடங்கவில்லை. தனுஷ் அடுத்த நோட்டீஸை நயன்தாராவுக்கு அனுப்பியுள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதில், ‘நானும் ரவுடிதான் பட காட்சிகள் உங்கள் ஆவணப்படத்தில் இருந்து 24 மணி நேரத்துக்குள் நீக்க வேண்டும். இல்லையென்றால் நிலைமை இன்னும் மோசமாகும். அப்படி காட்சிகள் நீக்கப்படவில்லையென்றால் பாதிப்பு 10 கோடியுடன் நிற்காது . ஒரு படத்தை எடுக்கும் போது ஒவ்வொரு காசையும் எப்படி செலவழிக்க வேண்டுமென்று எங்களுக்கு  தெரியும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு நயன்தாரா 3 விநாடி காட்சிகள் மற்றொரு செல்போனில் படம் பிடிக்கப்பட்டது என்று விளக்கமளித்துள்ளார்.

இதற்கிடையே, நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா கூறுகையில், ‘நானும் ரவுடிதான் பட காட்சிகளை பயன்படுத்த நயன்தாரா தனுஷிடத்தில் அனுமதி கேட்டதாக சொல்வது உண்மையல்ல. கடந்த இரு வருடங்களாக தனுஷ் ரொம்ப பிசி. நானும் ரவுடிதான் படபிடிப்பில்தான் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலிக்க தொடங்கிய விஷயம் கூட என் மகனுக்கு  தெரியாது. வேலைதான் எனக்கும் என் மகனுக்கும் முக்கியம். எங்களை துரத்துபவர்களுக்கும் முதுகுக்கு பின்னால் பேசுபவர்களுக்கும் பதில் சொல்ல நேரம் இல்லை’ என்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள்: சுவாதி!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு… சிபிஐக்கு மாற்றம்! 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share